Aavesham : 100 கோடி வசூல் அள்ளிய பகத் பாசிலின் ஆவேஷம்... அதற்குள் ஓடிடிக்கு வருகிறதா? எப்போ ரிலீஸ் தெரியுமா?

First Published Apr 26, 2024, 10:48 AM IST

ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் ஹீரோவாக நடித்த ஆவேஷம் திரைப்படம் தியேட்டரில் சக்கைப்போடு போட்டு வரும் நிலையில், அதன் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

தமிழில் விஜய் நடித்த காதலுக்கு மரியாதை உள்பட பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கியவர் தான் பாசில். இவர் மலையாள திரையுலகிலும் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் ஆவார். இவரது மகனான பகத் பாசில் தற்போது மலையாள திரையுலகின் வசூல் சக்ரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளிலும் பிரம்மாண்ட படங்களில் நடித்து வருகிறார் பகத் பாசில்.

தற்போது பகத் பாசில் நடிப்பில் தமிழில் வேட்டையன் படம் உருவாகி வருகிறது. ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கும் இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்து வருகிறார் பகத் பாசில். இதுதவிர வடிவேலு உடன் இணைந்தும் ஒரு படத்தில் நடிக்கிறார். மேலும் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் புஷ்பா 2 திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் பகத் பாசில். இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன.

இதையும் படியுங்கள்... Nayanthara : நயன்தாராவா இது..? ஹாலிவுட் ஹீரோயின் போல் மாறி லேடி சூப்பர்ஸ்டார் நடத்திய பிளெடி ஸ்வீட் போட்டோஷூட்

வேட்டையன் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதமும், புஷ்பா 2 திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதமும் திரைக்கு வர உள்ளது. இதுதவிர மலையாளத்திலும் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் பகத் பாசில். இப்படி செம்ம பிசியாக நடித்து வரும் பகத் பாசில் நடிப்பில் அண்மையில் ரிலீஸ் ஆன திரைப்படம் தான் ஆவேஷம். ஜித்து மாதவன் இயக்கிய இப்படத்தில் செம்ம மாஸான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பகத் பாசில்.

ஆவேஷம் திரைப்படத்திற்கு கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் அமோக வரவேற்பு கிடைத்தது. வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்து இருந்தது. திரையரங்கில் சக்கைபோடு போட்டு வரும் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற மே மாதம் 17-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... தாய்லாந்துக்கு ஒரு ஜாலி ட்ரிப்.. குட்டி யானையுடன் கொஞ்சி விளையாடிய ஆதி - நிக்கி கல்ராணி ஜோடியின் Cute கிளிக்ஸ்

click me!