Corona Kumar : டைட்டில் மாற்றம்.. விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகும் வாரிசு நடிகை - கொரோனா குமார் படத்தின் அப்டேட்ஸ்

First Published Mar 28, 2024, 10:45 AM IST

கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள கொரோனா குமார் படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளதோடு அதன் ஹீரோயின் குறித்த அப்டேட்டும் கசிந்துள்ளது.

Vishnu Vishal, Gokul

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா, சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களை இயக்கியவர் கோகுல். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் கொரோனா குமார். இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த 2021-ம் ஆண்டே வெளிவந்தது. அப்போது அதில் சிம்பு ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும், வேல்ஸ் நிறுவனம் அப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பின்னர் அப்படத்தை கிடப்பில் போட்டனர்.

corona kumar

இதையடுத்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கும் நடிகர் சிம்புவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், கொரோனா குமார் படத்தில் இருந்து சிம்பு விலகினார். இதையடுத்து வேறு நடிகரை வைத்து அப்படத்தை எடுக்க முடிவெடுத்தனர். அதன்படி அண்மையில் நடிகர் விஷ்ணு விஷாலிடம் கதையை சொல்லி ஓகே வாங்கி இருந்தார் இயக்குனர் கோகுல். இதையடுத்து அப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளும் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... Prithviraj : மலையாள திரையுலகின் 'நடிப்பு அசுரன்' பிருத்விராஜ் சுகுமாரன் இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?

Vishnu Vishal

இந்த நிலையில், தற்போது கொரோனா குமார் படத்தின் டைட்டில் மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி அப்படத்திற்கு வைப் குமார் என புதிதாக பெயரிடப்பட்டு உள்ளதாம். அதுமட்டுமின்றி தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப படத்தின் ஸ்கிரிப்டிலும் சில மாற்றங்களை செய்திருப்பதாக கூறப்படுகிறது. 2 மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். 

Aditi Shankar

அதுமட்டுமின்றி இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தில் நடித்து வரும் அதிதி, விரைவில் வைப் குமார் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... GOAT movie : தளபதி விஜய்யின் கோட் படத்தில் ‘தல’யும் நடிக்கிறாரா? வெங்கட் பிரபுவின் மாஸ் சம்பவம் லோடிங்

click me!