ஐபிஎல் டிராபியை சிஎஸ்கே அறையில் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் விடைபெறுகிறேன் – மதீஷா பதிரனா!

First Published May 7, 2024, 12:19 PM IST

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டிராபியை சிஎஸ்கே அறையில் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் விடைபெறுகிறேன் என்று சிஎஸ்கேயின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா கூறியுள்ளார்.

Matheesha Pathirana Family With MS Dhoni

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மதீஷா பதிரனா. தோனியின் செல்லப்பிள்ளையாகவும் இருக்கிறார். எப்போதெல்லாம் விக்கெட் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் வந்து விக்கெட்டுகள் எடுத்துக் கொடுப்பதில் வித்தகர். ஆதலால், பெரியளவில் காயம் ஏற்படாமல் இருக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது அவரை பாதுகாத்து வந்தது.

MS Dhoni

இந்த சீசனில் 6 போட்டிகளில் விளையாடிய பதிரனா, 13 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். தேவைப்படும் போது இந்த சீசனில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காயம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

Chennai Super Kings, IPL 2024

சென்னையில் நடைபெற்ற 49ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக பதிரனா களமிறங்கவில்லை. டி20 உலகக் கோப்பை தொடருக்கான விசா எடுக்க இலங்கைக்கு புறப்பட்டுச் சென்று பின், மீண்டும் இந்தியா வந்திருந்தார். தீக்‌ஷனா மற்றும் பதிரனா இருவரும் தரம்சாலா வந்திருந்த புகைப்படம் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 53ஆவது லீக் போட்டியின் போது சிஎஸ்கே நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

IPL 2024, Playoffs

தசைப்பிடிப்பு காரணமாக பதிரனா இலங்கைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறார். அவர் விரைவில் குணமடைய சென்னை அணியின் சார்பில் வாழ்த்துகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இனி வரும் போட்டிகளில் பதிரனா இடம் பெற வாய்ப்பில்லை. ஏற்கனவே தீபக் சாஹரும் காயம் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 49ஆவது லீக் போட்டியில் முதல் ஓவரில் 2 பந்துகள் வீசிய நிலையில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Super Kings

தரம்சாலாவில் நடைபெற்ற 53ஆவது லீக் போட்டியில் மிட்செல் துஷார் தேஷ்பாண்டே இருவரும் இடம் பெற்று விளையாடினர். மேலும், இம்பேக்ட் பிளேயராக சிமர்ஜீத் சிங் இடம் பெற்று விளையாடினார். அவர், 3 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்திருந்தது.

CSK

பின்னர், எளிய இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியில் 9 விக்கெட்டுகளை இழந்து139 ரன்கள் மட்டுமே எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில், அணியிலிருந்து விலகிய பதிரனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

Matheesha Pathirana Instagram

2024 ஐபிஎல் சாம்பியன் டிராபியை விரைவில் சிஎஸ்கே அறையில் பார்க்க வேண்டும் என்ற எனது ஒரே ஆசையுடன் விடை பெறுகிறேன். சென்னையின் அனைத்து ஆசீர்வாதங்களுக்கும், அன்புக்கும் சிஎஸ்கே அணிக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

Matheesha Pathirana Hamstring Injury

கடந்த ஆண்டு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 5ஆவது முறையாக டிராபியை கைப்பற்றிய நிலையில், இந்த சீசன் தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என்று சொல்லப்படும் நிலையில் 6ஆவது முறையாக சிஎஸ்கே டிராபியை கைப்பற்ற கடுமையாக போராடி வருகிறது.

Matheesha Pathirana

ஆனால், தோனி தனது கடைசி ஐபிஎல் சீசன் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து ஒரு விக்கெட் மற்றும் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். களத்தில் பீல்டிங் செட் செய்தும் வருகிறார். இதுவரையில் சிஎஸ்கே விளையாடிய 11 போட்டிகளில் 6ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது.

click me!