ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா? சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை லெப்ட் ரைட் வாங்கிய ராதிகா!

Published : May 14, 2024, 09:31 AM ISTUpdated : May 14, 2024, 10:45 AM IST
ஏன் டா படுபாவி!  ஜெயிலுக்கு போயும் நீ  திருந்த மாட்டியா? சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை லெப்ட் ரைட் வாங்கிய ராதிகா!

சுருக்கம்

ஏன் டா படுபாவி!  ஜெயிலுக்கு போயும் நீ  திருத்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங் களே...அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய  சக்ரவர்த்தியோட பேரு வேற.

தனது சர்ச்சை பேச்சால் சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ள திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தற்போது சரத்குமார் குறித்து அநாகரிகமாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தரக்குறைவான கருத்துகளை பேசியிருந்தார். இதுதொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து எதிர்க்கட்சிகள் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து முதலில்  கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதை அடுத்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். மேலும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். 

இதையும் படிங்க: இபிஎஸ் பொதுச்செயலாளர் அறிவிக்கப்பட்டதும் மனசுல எம்ஜிஆர் நினைப்போ? எதுக்கு இந்த போலி வேடம்? கே.சி.பழனிசாமி!

 இதனை தொடர்ந்து சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கழக பணியாற்றிட கோரிக்கை விடுத்திருந்தார் இதனை ஏற்றுக்கொண்ட திமுக தலைமை ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இந்நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சரத்குமார் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இதற்கு ராதிகா சரத்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

 

இதுதொடர்பாக நடிகரும், விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளருமான ராதிகா சரத்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: ஏன் டா படுபாவி!  ஜெயிலுக்கு போயும் நீ  திருத்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங் களே...அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய  சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம்  கடுமையாக தண்டிக்கப்படனும்., shame on திமுக என்று கூறி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ராதிகா சரத்குமார் டேக் செய்துள்ளார்.

இதையும் படிங்க:  அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 11 மாவட்டங்களில் மழை பிச்சு உதற போகுதாம்.. வானிலை மையம் எச்சரிக்கை!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இன்னும் மழையின் ஆட்டம் முடியல! வானிலை மையம் எச்சரிக்கையும்! டெல்டா வெதர்மேனின் அப்டேட்டும்
வளர்ச்சி அரசியலா..? டேஷ் அரசியலா..? மாமதுரையில் நிகழும் அசாதாரண சூழல்.. முதல்வர் பரபரப்பு