இந்த வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் ஆயுர்வேத மூலிகைகள் இதோ..

First Published Apr 12, 2024, 3:53 PM IST

உணவில் சில ஆரோக்கியமான ஆயுர்வேத மூலிகைகளை சேர்த்துக்கொள்வது இந்த கோடையில் வெப்பத்தை தணிக்க உதவும்.

வெயில் சுட்டெரித்து வரும் இந்த கோடை கால்உங்கள் உடலின் ஆரோக்கியத்தையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பராமரிப்பது மிகவும் முக்கியம்.. உலகளாவிய வெப்பநிலை தற்போதைய அளவை விட 1 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் அதிகரித்தால், பில்லியன் கணக்கான மக்கள் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

கொளுத்தும் வெயிலில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அதே வேளையில், கோடையில் ஏற்படும் வயிற்றில் ஏற்படும் தொற்றுகள், உஷ்ணப் பாதிப்புகள், வெயிலின் தாக்கம் போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்த்துப் போராட நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதும் அவசியம். உங்கள் உணவில் சில ஆரோக்கியமான ஆயுர்வேத மூலிகைகளை சேர்த்துக்கொள்வது இந்த கோடையில் வெப்பத்தை தணிக்க உதவும்.

துளசி

பல வீடுகளில் பொதுவாக இருக்கும் துளசி இருமல், சளி, காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் மட்டுமல்ல, கோடை வெப்பத்தை எதிர்த்துப் போராடும் ஒரு சக்திவாய்ந்த மூலிகையாகும். இது உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவுவதுடன், நச்சு நீக்கம் மற்றும் சுத்தப்படுத்தும் பண்புகள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். வெப்பத்தைத் தணிக்க தினமும் 4-5 இலைகளை மென்று சாப்பிடுங்கள். 

புதினா

தினமும் புதினாவை உட்கொள்வதன் மூலம் கோடையில் உங்கள் மனதையும் உடலையும் புத்துணர்ச்சி உடன் வைத்திருக்க முடியும். இந்த மூலிகை மருத்துவ குணங்களால் நிறைந்துள்ளது, இது செரிமானத்திற்கு உதவுகிறது. நமது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குடிக்கும் தண்ணீரில் புதினா இலைகளை போட்டு குடித்து வந்தால் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். அல்லது புதினா சட்னி அல்லது புதினா துவையல் அல்லது புதினா சாதம் என பல்வேறு வழிகளில் இதை உட்கொள்ளலாம். 

சோற்றுக் கற்றாழை

குளிர்ச்சிக்கு பெயர் போன சோற்றுக்கற்றாழை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதன் மூலம் நம் உடலுக்கு ஆல்-ரவுண்டராக செயல்படுகிறது. கற்றாழை சருமத்தை குணப்படுத்துவது மட்டுமல்லாமல், அதன் சாற்றை உட்கொள்வது செரிமான அமைப்பை நச்சுத்தன்மையாக்கி கோடை வெப்பத்தை எதிர்த்துப் போராடும்.

கொத்தமல்லி

கொத்தமல்லியில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, கோடை மாதங்களில் ஏற்படும் பல செரிமான பிரச்சனைகளை எதிர்த்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகின்றன. கொத்தமல்லியை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள பல வழிகள் உள்ளன, கொத்தமல்லி துவையல் அல்லது சட்னி போன்ற பல வழிகளில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இஞ்சி

இஞ்சியை உட்கொள்வது வயிற்று உப்புசம், வாயு மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு உதவும். மேலும், வெப்பம், சூரிய ஒளி போன்ற காரணங்களால் வீக்கம் அதிகரிக்கும் போது அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் குறிப்பாக உதவியாக இருக்கும். கோடையில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களின் வெளிப்பாடு அதிகரிக்கும் போது இஞ்சியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் உள்ளன.

click me!