Katchatheevu : அண்ணாமலை வெளியிட்ட ஆவணங்கள் போலியா.? கச்சத்தீவு விவகாரத்தில் வெளியான ஷாக் தகவல்

By Ajmal Khan  |  First Published May 9, 2024, 11:56 AM IST

கச்சத்தீவு விவகாரத்தில் வெளியுறவு அமைச்சகத்தில் பணியாற்றாத நபரின் பெயரில்  மோசடியாக சட்டவிரோதமாக ஆவணத்தை வெளியிட்டுள்ளதா வெளியுறவுத்துறை அமைச்சகம் ? என பத்திரிக்கையாளர் அரவிந்தாக்‌ஷன் கேள்வி எழுப்பியுள்ளார். 


கச்சத்தீவு விவகாரம் அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் விறு விறுப்பாக நடைபெற்ற வந்த போது பாஐக மாநில தலைவர் அண்ணாமலை கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் ஒன்றை வெளியிட்டார். அதில் கச்சத்தீவை கருணாநிதி ஒப்புதலோடு வழங்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. மேலும் காங்கிரஸ் இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை பிரதமர் மோடியும் ரீ டுவிட் செய்து பிரச்சாரத்தின் போது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை விமர்சித்திருந்தார். இந்தநிலையில் அண்ணாமலையின் கேள்விக்கு பதில் அளித்த அதிகாரி வெளியுறது துறை அமைச்சகத்தில் பணியாற்றவில்லையென பத்திரிக்கையாளர் அரவிந்தாக்‌ஷன் தெரிவித்துள்ளார். 

துளிகூட சந்தேகம் வேண்டாம்

வெளியுறவுத்துறை அமைச்சகத்தில்
CNV &I டிவிஷனில்
Monika Agarwal,Sheelmani என்ற இருவர் மட்டுமே Under secretary ஆக
பணியாற்றுகிறார்கள் என்று வெளியுறவு அமைச்சகமே ஒப்புக்கொள்கிறது.
RTI விண்ணப்பத்திற்கு பதிலும் கொடுத்துள்ளது
12/13 pic.twitter.com/qc1J5YBnG9

— Aravindakshan B R (@RealAravind36)

Tap to resize

Latest Videos

 

ஆர்டிஐயில் வெளியான கச்சத்தீவு தகவல்

இது தொடர்பாக பத்திரிக்கையாளர் அரவிந்தாக்‌ஷன் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், கச்சத்தீவு தொடர்பாக மார்ச் மாதம் 5ஆம் தேதி அன்று பெறப்பட்ட RTI விண்ணப்பத்திற்கு வெளியுறவு அமைச்சகத்தில் பணியாற்றும் உயர் அதிகாரி ஒருவர் CNV &I டிவிஷனில் Under Secretary ஆக பணியாற்றி வரும் Ajay Jain என்பவருக்கு  மார்ச் 12ஆம் தேதியன்று மனுதாரருக்கு உரிய பதில்களை வழங்கவேண்டு மென உத்தரவுபிறப்பிக்கிறார். தனக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் Ajay Jain என்ற Under Secretary மார்ச் 31ஆம் தேதியன்று  அண்ணாமலையின் விண்ணப்பத்திற்கு  17 பக்க பதில் வழங்கி RTI மனுவை Dispose செய்கிறார் .

கச்சத்தீவு மீட்பு... ஒரு வார்த்தை கூட இடம்பெறாத பாஜக தேர்தல் அறிக்கை.. தமிழக கூட்டணி கட்சிகள் அதிருப்தி

பத்திரிக்கையில் முன்னதாக வெளியானது எப்படி.?

31 ம் தேதி காலை தான் விண்ணப்பத்திற்கான பதில்கள் வழங்கப்படுகிறது. ஆனால், அதே தினத்தி்ல் இந்தியா முழுவதும் டைம்ஸ் ஆப் இந்தியா என்ற நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டு விடுகிறது. அதாவது,மனுதாரருக்கு பதில்கள் கிடைப்பதற்கு முன்பே பத்திரிகைக்கு கிடைத்து விடுகிறது. நீதிபதி தீர்ப்பை வெளியிடுவதற்கு முன்பே அதன் மொத்த சாரம்சமும் தீர்ப்பின் நகலும் ஒரு பத்திரிகைக்கு கிடைத்தால் எவ்வளவு மோசமோ அதே தான் இந்த விவகாரத்திலும் நடந்துள்ளது. இதே போல மற்றொரு சம்பவத்தை தெரிவித்துள்ள அரவிந்தாக்‌ஷன்,  அண்ணாமலையின் RTI விண்ணப்பத்திற்கு பதில் வழங்கிய நபரின் பெயர் Ajay Jain  இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணையப்பக்கத்திலோ  Ajay Jain என்ற அதிகாரியின் பெயரே குறிப்படப்படவில்லை. 

பதில் கொடுத்த அதிகாரி யார்.?

அப்படியென்றால், வெளியுறவு அமைச்சகத்தில் பணியாற்றாத நபரின் பெயரில்  மோசடியாக சட்டவிரோதமாக ஆவணத்தை வெளியிட்டுள்ளதா வெளியுறவுத்துறை அமைச்சகம் ? துளிகூட சந்தேகம் வேண்டாம் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் CNV &I டிவிஷனில் Monika Agarwal,Sheelmani என்ற இருவர் மட்டுமே Under secretary ஆக  பணியாற்றுகிறார்கள் என்று வெளியுறவு அமைச்சகமே ஒப்புக்கொள்கிறது. RTI விண்ணப்பத்திற்கு பதிலும் கொடுத்துள்ளது. உலகத்தில் எந்த நாட்டிலாவது இந்த அயோக்கியத்தனம் நடக்குமா ? ஒரு அமைச்சகத்தில் பணியாற்றாத நபரின் பெயரில் போலியாக ஆவணத்தை தயாரித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அரசியல்வாதியின் விண்ணப்பத்திற்கு பதில் கொடுத்துள்ளது. 

பித்தலாட்ட நாடகம்

அந்த ஆவணங்களை கையில் வைத்துக்கொண்டு அதே துறையின் அமைச்சர் பேட்டியளிக்கிறார். இந்த வேலையை மொத்த வெளியுறவு அமைச்சகமும் பிஜேபியின் தேர்தல் ஆதாயத்திற்காக செய்துள்ளது. அதற்கு அமைச்சர்  ஜெய்சங்கரும் பகிரங்கமாக உதவி செய்துள்ளார். இதுவரை இந்தியாவின் எந்த அமைச்சகமும் செய்யாத அயோக்கியத்தனத்தை MEA செய்துள்ளது. இப்படியொரு பித்தலாட்டத்தை செய்ததற்காக வெளியுறவு அமைச்சகம் @MEAIndia கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டும் என தனது பதிவில் அரவிந்தாக்‌ஷன் தெரிவித்துள்ளார். 

கச்சத்தீவை தாரைவார்த்தது காங்கிரஸ், திமுக: வேலூர் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

click me!