கோவையில் சட்ட விரோதமாக சுற்றி திரிந்த வங்கதேச இளைஞர்கள்; ஒவ்வொரு ஆலையாக சல்லடை போட்டு தேடும் அதிகாரிகள்

By Velmurugan s  |  First Published May 9, 2024, 11:32 AM IST

கோவை அருகே சட்டவிரோதமாக தங்கி இருந்து தனியார் தொழிற்சாலையில் டெய்லராக பணியாற்றி வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 


கோவை மாவட்டம், அன்னூர் அருகே செயல்படும் தொழிற்சாலைகள் மற்றும் ஜவுளி சார்ந்த தொழில் நிறுவனங்களில் வடமாநிலங்களைச்  சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் வங்கதேசத்தைச் சேர்ந்த சிலர் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து ஆலைகளில் பணிபுரியும் வெளி மாநிலத்தவர் குறித்த உரிய ஆவணங்களை தொழிற்சாலை நிர்வாகம் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப் பட்டிருந்தது. 

அண்ணன் என நம்பி வந்த சிறுமி; மனநலம் பாதித்தவர் என்றும் பாராமல் காமுகன்கள் செய்த கொடூர செயல்

Tap to resize

Latest Videos

இதனிடையே காவல் துறையினர் அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது மாணிக்கம்பாளையம் பகுதியில் தனியார் உள்ள தனியார் ஆடை உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது அர்ஜு (வயது 26), போலாஸ் பர்மன் (28) ஆகிய இருவர், உரிய ஆவணங்கள் இன்றி, சட்டவிரோதமாக தங்கியிருந்தது தெரிந்தது. 

வேட்டி, சட்டையுடன் மாஸ் லுக்கில் தலைவர் ரஜினிகாந்த்; இறுதி கட்ட படபிடிப்பு பணியில் வேட்டையன்

இதையடுத்து இருவரையும் காவல் துறையினர், அன்னூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த முகமது அர்ஜு கடந்த 2012 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி திருப்பூரில் டெய்லராக பணிபுரிந்து வந்ததுடன், ஆதார் மற்றும் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களையும் பெற்றதும், 2023 ஆம் ஆண்டு முதல் அன்னூர் பகுதியில் பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

click me!