சோனியா, ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்.. சாம் பிட்ரோடா விவகாரத்தில் வானதி சீனிவாசன் ஓபன் டாக்..

By Raghupati R  |  First Published May 8, 2024, 10:24 PM IST

இந்தியர்களை நிறத்தின் அடிப்படையில் இழிவுப்படுத்திய சாம் பிட்ரோடா மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாம் பிட்ரோடாவின் நிறவெறி கருத்துக்கு சோனியா, ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார் வானதி சீனிவாசன்.


கோவை தெற்கு எம்.எல்.ஏவும், பாஜகவை சேர்ந்தவருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் குடும்பத்தினருக்கு மிகமிக நெருக்கமானவரும், காங்கிரஸ் அயலக பிரிவின் தலைவருமான சாம் பிட்ரோடா, 'தி ஸ்டேஸ்மேன்' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "இந்தியாவின் கிழக்கு பகுதியில்  உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்கள் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களைப் போலவும் தோற்றமளிக்கின்றனர்" என்று கூறியுள்ளார்.

இது 140 கோடி இந்தியர்களை நிறத்தின் அடிப்படையில் இழிவுப்படுத்தும் நிறவெறிச் செயல். சாம் பிட்ரோடா சாதாரண நபர் அல்ல. ராஜிவ் காந்தி காலத்திலிருந்து சோனியா குடும்பத்திலும், காங்கிரஸ் கட்சியிலும் ஆதிக்கம் செலுத்துபவர். எப்போதெல்லாம் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறதோ அப்போதெல்லாம் அதிகாரமிக்க பொறுப்புகளில் நியமிக்கப்பட்டவர். எனவே, அவரது கருத்தை சோனியா, ராகுல் மற்றும் காங்கிரஸின் கருத்தாகவே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். எனவே, காங்கிரஸ் சார்பில், 'கட்சிக்கு தொடர்பில்லை' என பெயரளவுக்கு ஓர் அறிக்கை விட்டு தப்பிக்க முடியாது. 

Latest Videos

undefined

சாம் பிட்ரோடா கருத்துக்கு சோனியா, ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘பாரத ஒற்றுமை’ என்ற பெயரில் காங்கிரஸ் இளவரசர் ராகுல் நாடெங்கும் யாத்திரை மேற்கொண்டார். ஆனால், வடக்கு, தெற்கு என்றும், மொழி, இனம் அடிப்படையிலும் நாட்டை கூறுப்போடும் வகையில், ராகுல் உள்ளிட்டோர் தொடர்ந்து பேசி வருகின்றனர். 'இந்தியா ஒரே நாடல்ல' என்ற திராவிடர் கழகத்தின் கொள்கையை இப்போது ராகுல் முழங்கி வருகிறார். காங்கிரஸின், ராகுலின் பிரிவினை சிந்தனையின் தொடர்ச்சியாக, நிறத்தின் அடிப்படையில் இந்தியர்களிடம் பிரிவினையை ஏற்படுத்த சாம் பிட்ரோடா முயற்சித்துள்ளார். 

நம் தாய்மண்ணின் மகத்துவத்தை உணராமல், காலனியாதிக்கத்தின்  பிடியில் உழன்று கொண்டிருக்கும், காங்கிரஸின் சிந்தனையைதான் சாம் பிட்ரோடா பிரதிபலித்துள்ளார். நமது மண்ணின் மைந்தர்களை தோலின் நிறம் கொண்டு வேறுபடுத்தியதோடு, ஒரு படி சென்று, இந்தியர்களை வேறு நாட்டினராய் அடையாளப்படுத்தி உள்ளார்.  நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்கிறார். மறுபுறம், எதிர்க்கட்சியான காங்கிரஸ் நிறத்தின் வாயிலாய் நம்மை இந்தியர் அல்லாதவர் என இழிவுபடுத்துகிறது. இதே சாம் பிட்ரோடா தான் சில வாரங்களுக்கு முன்பு, "பரம்பரை சொத்தில் 55 சதவீதம் அரசுக்கு அளிக்கப்பட வேண்டும்" என்று,  மக்களின் சேமிப்பை சுரண்ட எண்ணியவர்.

வழக்கம்போல இது சாம் பிட்ரோடாவின் தனிப்பட்ட கருத்து என்று காங்கிரஸ்  விலகிக்கொள்ள முயற்சித்தாலும், மக்களின் ஒற்றுமையை பிளவுபடுத்தும் காங்கிரஸின் அடிப்படை சித்தாந்தம் அவர்களின் செயல்பாடுகள் மூலம் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. 2000 வருடங்களுக்கு முன்பு நிறத்தின் அடிப்படையில் நம்மை அந்நிய சக்திகளான ஆங்கிலேயர் நம்மை இழிவுபடுத்தினர், பின் அடிமைப்படுத்தினர். இன்றைய நவீன விஞ்ஞான உலகிலும் காங்கிரஸ் அதே வழியைப் பின்பற்றி நிறத்தின் வாயிலாய் நம்மை பிரித்து ஆட்சி கட்டிலில் அமர துடிக்கிறது. மக்களை பிளவுபடுத்தி இழிவுபடுத்தும் 'இண்டி' கூட்டணியினருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும்  நான் தெளிவுபடுத்த விரும்புவது என்னவென்றால், "ஆம்,  நாட்டின் தென் பகுதியில் இருப்பவராகிய நாங்கள் கருப்பு நிறமுடையவர்கள் தான்.

ஆனால் என்றும் பெருமைமிகு இந்தியர்கள். எங்களை அந்நியப்படுத்த முயற்சிக்கும் தங்களை போன்றோருக்கு எங்களின் வலிமையை ஜூன் நான்காம் தேதி புரிய வைப்போம்" நிறத்தின் அடிப்படையில் இந்தியரை இழிவுபடுத்தும், புள்ளிகளை தங்கள் பெயரில் கொண்டிருக்கும் கூட்டணிக்கு மக்கள் விரைவில்  முற்றுப்புள்ளி வைப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

விஜய் கிடையாது.. ரஜினி கிடையாது.. தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் இவர்தான் தெரியுமா?

click me!