திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம், வன்னிகோனேந்தல் பகுதிகளைச் சேர்ந்த ஒன்பது கிராமப் பொதுமக்கள் மீது ஒருதலைபட்சமாக பொய்வழக்குகளை பதிவு செய்வதாக தேவர்குளம் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் மீது தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன.
அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்த பொதுமக்களின் மீது நடத்தப்பட்டிருக்கும் தடியடி கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: பொய் வழக்குகள் பதிவு செய்வதாக தேவர்குளம் காவல்நிலைய காவலர்கள் மீது பொதுமக்கள் புகார் - அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்த பொதுமக்களின் மீது நடத்தப்பட்டிருக்கும் தடியடி கடும் கண்டனத்திற்குரியது.
undefined
இதையும் படிங்க: பொதுமக்களின் உயிரோடு இப்படி விளையாடலாமா முதல்வரே? இது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா? டிடிவி. விளாசல்!
திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம், வன்னிகோனேந்தல் பகுதிகளைச் சேர்ந்த ஒன்பது கிராமப் பொதுமக்கள் மீது ஒருதலைபட்சமாக பொய்வழக்குகளை பதிவு செய்வதாக தேவர்குளம் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் மீது தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், பொய் வழக்குகளை பதிவு செய்யும் தேவர்குளம் காவல் நிலையத்தை கண்டிக்கும் வகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் இசக்கிராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மீது தடியடி நடத்தியிருக்கும் காவல்துறையின் இரக்கமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது.
இதையும் படிங்க: இதெல்லாம் தமிழகத்தின் சாபக்கேடு! ஆளுங்கட்சியின் ஆதரவுடன் முதலில் கஞ்சா! இப்போது குட்கா! இறங்கி அடிக்கும் TTV!
பொதுமக்களின் புகார்களை விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, எவ்வித காரணமும் இல்லாமல் பொதுமக்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்வதும், அறவழியில் போராடியவர்கள் மீது அடக்குமுறையை கையாண்டு, தடியடி நடத்தியிருப்பதும் உட்சபட்ச அராஜகம். எனவே, பொதுமக்கள் மீது பொய்வழக்குகளை பதிவு செய்வதாக தேவர்குளம் காவல்நிலைய காவலர்கள் மீது எழுந்துள்ள புகார்களை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, அப்பகுதி மக்கள் மீது பதியப்பட்ட பொய் வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் காவல்துறை மற்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.