Kitchen Tips : ஃப்ரிட்ஜில் வைத்த சப்பாத்தி மாவு கருப்பாக மாறாமல் இருக்க சூப்பரான டிப்ஸ் இதோ!

First Published May 9, 2024, 11:57 AM IST

சப்பாத்தி மாவை ஃப்ரிட்ஜில் வைத்தாலும், அதன் மேல் ஒரு கருப்பு அடுக்கு தெரியும். எனவே, இப்படி நடக்காமல் இருக்க.. மாவு சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்க ஒரு வழி உள்ளது. அது என்ன தெரியுமா..?
 

சிலர் சப்பாத்தி மாவு பிசையும் போது இரண்டு மூன்று நாட்களுக்குத் தேவையான அளவு பிசைந்து அதை ஃப்ரிட்ஜில் வைத்து விடுகிறார்கள். ஆனால், அந்த மாவு  நாட்களுக்கு மேல் நிறம் மாறி காணப்படும். மேலும் அதன் மேல் கருப்பு அடுக்கு படர்ந்து இருக்கும். எனவே, இப்படி நடக்காமல் இருக்க.. மாவு சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்க ஒரு வழி உள்ளது. அது என்ன தெரியுமா..?

நீங்கள் சப்பாத்தி மாவு பிசையும் போது சில முன்னெச்சரிக்கைகள் எடுத்தால் போதும் மாவு விரைவில் கெட்டுப் போகாது. அது என்னவென்றால், மாவு பிசையும் போது தண்ணீரில் கொஞ்சம் ஐஸ் கட்டிகளைச் சேர்த்து, அது கரைந்ததும் பிறகு பிசையவும்.

chapati

இப்படி செய்தால் மாவு சீக்கிரம் கெட்டு போகாது. ஏன் கருப்பாக கூட மாறாது. இப்படி செய்த பிறகு உடனே சப்பாத்தி சுட்டால் மென்மையாக இருக்கும். பிறகு மீந்த மாவை காற்றுப் புகாத டப்பாவில் வையுங்கள்.

இதையும் படிங்க:  நீங்களும் சப்பாத்தி மாவை பிசைந்து ஃப்ரிட்ஜில் வைப்பீங்களா? ஜாக்கிரதையாக இருங்கள்..!!

ஃப்ரிட்ஜில் வைத்த சப்பாத்தி மாவு மென்மையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?: பெரும்பாலான சமயங்களில், ஃப்ரிட்ஜில் வைத்த சப்பாத்தி மாவில் சப்பாத்தி சுட்டால் மென்மையாக இருக்காது. இந்த சிக்கலை தீர்க்க ஒரு வழி உள்ளது. அது என்னவென்றால், மாவு மேல் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 10 நிமிடம் கழித்து அதில் சிறிது உலர்ந்த மாவு சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மென்மையாக இருக்கும்.

இதையும் படிங்க: ஹெல்த் டிப்ஸ்: இரவில் சப்பாத்தி சாப்பிடும் பழக்கம் உண்டா? ....அப்போ கண்டிப்பா இதை படியுங்க..!

சப்பாத்தி மாவை நீண்ட நாள் சேமிக்க வழி: சப்பாத்தி மாவை பிசைந்து ஃப்ரிட்ஜில் வைக்கும் போது அதன் மேல் சிறிது எண்ணெய் ஊற்றவும். அதன் பிறகு, அதை காற்று புகாத டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். இப்படி செய்தால் சப்பாத்தி மாவு நீண்ட நாள் இருக்கும், சீக்கிரம் கெட்டும் போகாது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!