படுக்கையறையில் போட்டோஷூட்... கவர்ச்சிக்கு க்ரீன் சிக்னல் காட்டுகிறாரா பிரியங்கா மோகன்? வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்

First Published Mar 24, 2024, 3:15 PM IST

ஹோம்லி வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை பிரியங்கா மோகன் தற்போது படுக்கையறையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

தெலுங்கில் நானி நடிப்பில் வெளிவந்த கேங் லீடர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா மோகன். இதையடுத்து நெல்சன் இயக்கிய டாக்டர் படம் மூலம் கோலிவுட்டுக்கு எண்ட்ரி கொடுத்த அவர் முதல் படத்திலேயே சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தன்னுடைய கியூட்டான நடிப்பால் கவனம் ஈர்த்தார்.

டாக்டர் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு பிரியங்கா மோகனனுக்கு கிடைத்தது. பாண்டிராஜ் இயக்கிய அப்படத்தில் நடிகர் சூர்யாவின் மனைவியாக ஹோம்லி வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார். இதையடுத்து டான் படத்தில் கல்லூரி மாணவியாக வலம் வந்தார்.

வரிசையாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் லக்கி ஹீரோயின் என பெயரெடுத்த பிரியங்கா, அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படமும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியது.

இதையும் படியுங்கள்... Ramya Pandian : ஜாலியாக ஒரு ஹோலி கொண்டாட்டம்... வைரலாகும் ரம்யா பாண்டியனின் ரம்மியமான போட்டோஸ்

தற்போது நடிகை பிரியங்கா மோகன் கைவசம் தமிழில் இரண்டு படங்கள் உள்ளன. அதில் ஒன்றில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கிறார். பிரதர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை எம்.ராஜேஷ் இயக்குகிறார். இதைத் தொடர்ந்து நடன இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார் பிரியங்கா.

இதுதவிர தெலுங்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஒரு படமும் இவரின் லைன் அப்பில் உள்ளது. இப்படி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியான ஹீரோயினாக வலம் வந்தாலும், இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவரும் விதமாக போட்டோஷூட் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில தற்போது படுக்கையறையில் செக்ஸியாக போஸ் கொடுத்தபடி அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் செம்ம வைரல் ஆகி வருகிறது. பிரியங்கா மோகனின் இந்த போட்டோக்களை பார்த்து ஷாக் ஆன நெட்டிசன்கள், கவர்ச்சியாக நடிக்க கிரீன் சிக்னல் காட்டும் விதமாக தான் இந்த போட்டோஷூட்டை அவர் நடத்தி உள்ளதாக கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... அட நம்ம லாஸ்லியாவா இது? ஆளே மாறிட்டாங்கப்பா - மாடர்ன் உடையில் எக்கச்சக்க கவர்ச்சியில் வெளியிட்ட photos!

click me!