அட நம்ம லாஸ்லியாவா இது? ஆளே மாறிட்டாங்கப்பா - மாடர்ன் உடையில் எக்கச்சக்க கவர்ச்சியில் வெளியிட்ட photos!
Actress Losliya Mariyanesan : இலங்கையில் உள்ள கிளிநொச்சியில் பிறந்த பிரபல நடிகை லாஸ்லியா மரியநேசன், தமிழ் மொழியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானார்.
Losliya Mariyanesan
இலங்கைத் தமிழரான நடிகை லாஸ்லியா, கிளிநொச்சியில் ஒளிபரப்பாகி வந்த ஒரு தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். அதன் பிறகு அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்றார்.
Losliya
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் வெற்றியாளராக முகேன் அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் இடத்தை பிரபல நடிகர் சாண்டி மாஸ்டரும், மூன்றாம் இடத்தை லாஸ்லியா மரியநேசனும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Losliya Photos
அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிப்பில் வெளியான "பிரண்ட்ஷிப்" என்கின்ற திரைப்படத்தில் லாஸ்லியா நடித்திருந்தார். அதன் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான "கூகுள் குட்டப்பா" என்கின்ற திரைப்படத்திலும், சென்ற ஆண்டு வெளியான நயன்தாராவின் "அன்னபூரணி" திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார்.
மதுரையில் தடபுடலாக நடைபெற்ற ரோபோ சங்கர் மகள் திருமணம்... தாய்மாமனை கரம்பிடித்தார் இந்திரஜா...!