தொடை கொழுப்பை மளமளவென குறைக்க சூப்பரான டிப்ஸ்!! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!!

First Published Mar 26, 2024, 8:09 PM IST

சிலருக்கு தொடைகள் குண்டாக இருக்கும். எனவே, தொடை ஒல்லியாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை பின்பற்றுங்கள். அவை..

உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கு தொடைகளில் கொழுப்பு சேரும் பிரச்சனை வருவது என்பது மிகவும் பொதுவானது. ஆனால், ஒல்லியாக இருப்பவர்களில் பலரும் இந்த பிரச்சினையை அனுபவிக்கின்றனர். இது பொதுவாக மரபியல், வயது அதிகரிப்பு மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகும். 

அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தொடைகளை வலுவாகவும், நேர்த்தியாகவும் இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பினால்,  இந்தக் கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். 

உப்பை குறைவாகச் சேர்க்கவும்: நீங்கள் உணவில் அதிக உப்பை சேர்த்து சாப்பிட்டால் உடலில் அதிகப்படியான நீர்ச்சத்து ஏற்படுகிறது. இதனால் தொடைகள் உட்பட உடலின் பல பாகங்கள் தொய்வடையும். அத்தகைய சூழ்நிலையில், உடலில் நீர் தேங்குவதைத் தடுக்க உப்பு குறைவாக சாப்பிடுங்கள்.

அதிக எலக்ட்ரோலைட்களை சாப்பிடுங்கள்: எலக்ட்ரோலைட்டுகள் என்பது கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த உணவுகள். இதன் நுகர்வு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது, இதனால் உடல் கொழுப்பை வேகமாக எரிக்க முடியும்.

இதையும் படிங்க: பெண்களே! ப்ளீஸ் பெரிய தொடைகளை வெறுக்காதீங்க! அதனால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

கார்போஹைட்ரேட்டை குறைக்கவும்: கார்போஹைட்ரேட்டுகள் கிளைகோஜனாக மாற்றப்பட்டு கல்லீரலிலும் தசைகளிலும் தண்ணீருடன் சேமிக்கப்படுகிறது. நீங்கள் எவ்வளவு கார்போஹைட்ரேட் சாப்பிடுகிறீர்களோ, அவ்வளவு தண்ணீரை உங்கள் உடலில் சேமிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை சாப்பிடுவதைக் குறைத்தால், உடல் பருமனை எளிதாகக் குறைக்கலாம்.

இதையும் படிங்க: Weight Loss Tips : உடல் எடையை குறைக்க 'கொத்தமல்லியை' இப்படி யூஸ் பண்ணி பாருங்க!!

படிக்கட்டுகளில் ஏறுங்கள்: ஜிம் இல்லாமல் தொடையின் கொழுப்பைக் குறைக்க விரும்பினால், இன்றிலிருந்து, படிக்கட்டுகளில் ஏறத் தொடங்குங்கள். இது மிகவும் சக்திவாய்ந்த உடற்பயிற்சியாகும், இது தொடை தசைகளை வலுப்படுத்துகிறது மற்றும் கொழுப்பை எரிக்கிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கார்டியோ பயிற்சி: தொடை மற்றும் இடுப்பு கொழுப்பை குறைக்க கார்டியோ பயிற்சி சிறந்த வழியாகும். இதற்காக நீங்கள் ஓடுவது அல்லது 
நடனம் போன்றவற்றை தேர்வு செய்யலாம். அதுமட்டுமின்றி, சைக்கிள் ஓட்டுவதும் தொடைகளில் தேங்கியுள்ள கொழுப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல், தொடை தசைகளை பலப்படுத்துகிறது.

click me!