பெண்களே! ப்ளீஸ் பெரிய தொடைகளை வெறுக்காதீங்க! அதனால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?
பெரிய தொடைகளை பெண்கள் விரும்புவதில்லை. ஆனால் பெருத்த தொடைகள் பெண்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்வதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பெண்களின் வயது அதிகரிக்கும்போது அவர்களுடைய உடலின் சில பகுதிகளில் கொழுப்பு அதிகமாக சேரும். இப்படி உடலுடைய பல்வேறு உறுப்புகளில் அதிகமான கொழுப்பு சேருவது பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொதுவான பிரச்சனைதான். ஆனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே கொழுப்பு அதிகரிப்பதில் சில வித்தியாசங்களும் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பெண்களுடைய ஹார்மோன் மாற்றங்களால் தொடை, இடுப்பில் அதிக கொழுப்பு சேரும். ஆனால், ஆண்களுக்கு தொப்பை பெரிதாகும். ஆனால் தொடை, இடுப்பில் சேரும் கொழுப்பு பெண்களிம் ஆரோக்கியத்திற்கு தீமை தாம் என்பதை நீங்கள் அறிவீர்களா? வாருங்கள் பார்க்கலாம்.
சயின்டிஃபிக் அமெரிக்கன் செய்த ஆய்வின் கருத்துப்படி, ஆண்களை காட்டிலும் பெண்களின் உடல் கொழுப்பின் சதவீதம் அதிகமாக உள்ளது. சுமார் 25 வயதில் ஆரோக்கியமான எடை உடைய பெண்கள், ஆண்களை விடவும் 2 மடங்கு உடல் கொழுப்பைக் கொண்டுள்ளனர். பிறப்பு முதல் ஆறு வயது வரை, ஆண், பெண் இருவரிடமும் கொழுப்பு செல்களின் எண்ணிக்கையும் அளவும் மும்மடங்கு உள்ளது. இதன் காரணமாக, உடல் கொழுப்பு சம அளவில் அதிகரிக்கத் தொடங்குகிறது.
இந்த ஆய்வில் 35 முதல் 65 வயது வரையுள்ள 2 ஆயிரத்து 816 ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். இவர்களிடையே இதய நோய், பக்கவாதம், புற்றுநோய் ஆகிய எதுவும் காணப்படவில்லை. இந்த ஆய்வின் மூலம் தொடை எடை அதிகம் உள்ளவர்களுக்கு இதய நோய், அகால மரணம் ஏற்படும் அபாயம் மிகவும் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது. மற்றொரு ஆய்வு 2009ஆம் ஆண்டில் செய்யப்பட்டது. இதில், 60 முதல் 79 வயதுடைய 4 ஆயிரத்து 170 ஆண்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில் எடை குறைவாக இருப்பவர்கள் இதய நோய்களால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டது.
நம் உடலில் உள்ள தொடை தசைகள் அளவில் மிகப்பெரியவை. இதன் உதவியால் நம் உடல் எடையை பராமரிக்க முடிகிறது. தொடைகள் உங்கள் இடுப்புக்கு கீழ் இருந்து உங்கள் முழங்கால்கள் வரை நீண்டுள்ளது. ஹார்வர்ட் ஹெல்த் படி, பெண்களின் தொடைகளில் எடை அதிகரிப்பதற்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் முக்கிய காரணம். இந்த ஹார்மோன் பெண்களின் கொழுப்பு செல்களை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் தொடைகளைச் சுற்றி கொழுப்பு சேரும். பருவமடையும் போது பெண் ஹார்மோன் அளவுகள் உயர ஆரம்பிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
எட்டு வயதிலிருந்தே ஆண்களை காட்டிலும், பெண்களுக்கு உடலில் கொழுப்பு செல்களின் அளவு வேகமாக அதிகரிக்கத் தொடங்குகிறது. இப்போது பெண்களுக்கு பெரிய தொடைகள் இருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.. பாலினம் தவிர பரம்பரை, வயது மற்றும் சில சமயங்களில் உணவுப்பழக்கம் கூட உங்கள் தொடைகளை கனமாக பெரியதாக உணர வைக்கும். இது உங்கள் உடல் கொழுப்பைக் கரைப்பதற்குப் பதிலாக அதைக் குவிக்கத் தொடங்குகிறது. இது கீழ் உடலை பலப்படுத்துகிறது.
இதய நோய் வராது!
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சர்ச்சில் மருத்துவமனையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் உடலின் மற்ற உறுப்புகளை விட தொடை அல்லது பிட்டம் அதிக எடை கொண்டவர்களுக்கு சர்க்கரை நோய், இதய நோய், பல பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு குறைவு எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆப்பிள் பழம் கோடை காலத்தில் இவ்வளவு நல்லதா? நாளுக்கு 1 ஆப்பிள் சாப்பிட்டால்.. எந்த கோடை நோயும் வராது!
கர்ப்ப காலத்தில் உதவும்!
கர்ப்பிணிகள் ஒவ்வொரு மாதமும் எடை அதிகரிக்க ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்கு உண்டாகும் பெரிய தொடைகள் உடல் எடையை சுமக்க உதவுகின்றன. மேலும், பிரசவ காலத்தில் குழந்தை பம்ப் செய்வதில் உங்களுக்கு அதிக சிரமம் இருக்காது. பிரசவத்தின்போது பெரிய தொடைகள் பெரிதும் உதவுகின்றன. கர்ப்பத்திற்குப் பிறகு உங்கள் உடல் பலவீனமடையத் தொடங்கும். அப்போது அவை உங்கள் கீழ் உடலை தாங்கி ஆதரிக்கின்றன.
தொடைகளை வலுவாக்க பயிற்சிகள்
காலை நடைப்பயிற்சி, ஓட்டம் அல்லது சைக்கிள் ஓட்டுதல் ஆகியவை தொடைகளை வலுவாக வைத்திருக்க உதவும் சிறந்த பயிற்சிகள். நாள்தோறும் ஸ்குவாட் (squad), லஞ்சஸ் (lunges) சிறிது நேரம் செய்வதால் தொடை தசைகளின் இயக்கம் ஏற்படுகிறது. இது நீண்ட நேரம் உட்கார்ந்த பிறகும் அவர்களை உறுதியாக வைத்திருக்கும். தினம் படி ஏறுதல் கூட உங்கள் தொடைகளை பலப்படுத்துகிறது.
இதையும் படிங்க: அடிக்கடி டீ குடிக்கிறீங்களா? அந்த நேரத்துல இந்த 5 உணவுகளை எடுத்துக்காதீங்க! உடம்பு தாங்காது!!