லியோ உடன் போட்டிபோட பயந்து ஓடிடிக்கு தாவிய புதுப்படங்கள்.. இந்த வாரம் மட்டும் இத்தனை படங்கள் ஓடிடியில் ரிலீஸா?

First Published Oct 26, 2023, 11:26 AM IST

லியோ படம் திரையரங்குகளை ஆக்கிரமித்து உள்ளதால் இந்த வாரம் திரையரங்குகளை காட்டிலும் ஓடிடியில் ஏராளமான தமிழ் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.

Leo

பெரிய படங்கள் திரைக்கு வந்தால், அதனோடு போட்டி போட்டு சின்ன படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் தயங்குவதுண்டு. அப்படி ஒரு நிலைமை தான் தற்போது உள்ளது. நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்துக்கு போட்டியாக வேறு எந்த தமிழ் படமும் ரிலீஸ் ஆகாததால், கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் லியோ திரையிடப்பட்டது.

margazhi thingal

லியோ படம் வெளியாகி ஒரு வாரம் ஆகும் நிலையில், அதற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் இரண்டாவது வாரத்திலும் லியோ படம் சக்கைப்போடு போட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த வாரமும் இப்படத்துக்கு போட்டியாக திரையரங்குகளில் படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டி உள்ளனர். இந்த வாரம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கிய மார்கழி திங்கள் படம் மட்டும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. அக்டோபர் 27-ந் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஓடிடியில் நேரடி வெளியீடு

இந்த வாரம் இரண்டு தமிழ் படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளன. அதில் ஒன்று பிஎஸ் வினோத்ராஜ் இயக்கிய கூழாங்கல். இப்படத்தை விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து தயாரித்து உள்ளனர். இப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வருகிற அக்டோபர் 27-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர யாரோ என்கிற திரைப்படமும் நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

ஓடிடியில் ரிலீஸாகும் மற்ற தமிழ் படங்கள்

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்த சந்திரமுகி 2 திரைப்படம் அக்டோபர் 26-ந் தேதியான இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. அதேபோல் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த இறைவன் படமும் இன்று நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இதுதவிர சரத்குமார் மற்றும் அமிதாஷ் நடித்த பரம்பொருள் படமும் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது.

இதையும் படியுங்கள்... பாட்டி வயதிலும் குறையாத பியூட்டியோடு 57-வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை நதியா - வைரலாகும் வீடியோ

click me!