Anirudh Ravichander: தீம் மியூசிக் போடமாட்டேன்; CSK கொடுத்த ஆஃபரை நிராகரித்த அனிருத் - காரணம் என்ன?

First Published Mar 25, 2024, 10:23 AM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தினர் கேட்டும் சிஎஸ்கே-விற்கு தீம் மியூசிக் போட்டுக்கொடுக்க மறுத்துள்ளார் அனிருத், அதன் பின்னணியை பார்க்கலாம்.

Dhoni, anirudh

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பான் இந்தியா அளவில் செம்ம பிசியான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அனிருத். அவர் கைவசம் தமிழில் மட்டும், அஜித்தின் விடாமுயற்சி, சிவகார்த்திகேயனின் எஸ்.கே.23, ரஜினியின் வேட்டையன் மற்றும் தலைவர் 171, கமல்ஹாசனின் இந்தியன் 2, விக்னேஷ் சிவன் இயக்கும் எல்.ஐ.சி, நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் படம் என கிட்டத்தட்ட டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன.

Anirudh

இதுதவிர தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகி வரும் தேவரா மற்றும் அட்லீ அல்லு அர்ஜுன் இணையும் புதிய படம் ஆகியவற்றிற்கும் இசையமைப்பாளராக கமிட் ஆகி உள்ளார் அனிருத். ஜவான் வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டில் இருந்தும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இப்படி செம்ம பிசியாக உள்ள அனிருத், ஐபிஎல்லில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தீம் மியூசிக் போட்டுக்கொடுக்க சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... Anirudh : பாலிவுட் திரையுகை இசையால் அசர வைத்த அனிருத்! முதல் இந்தி படத்திற்கே கிடைத்த மிக உயரிய விருது!

Anirudh Ravichandran

ஐபிஎல்லில் அதிக ரசிகர்களை கொண்ட அணி என்றால் அது சிஎஸ்கே தான். அந்த அணியின் தீவிர ரசிகனாக இருந்தும் அதற்காக தீம் மியூசிக் போட்டுக் கொடுக்க மறுத்திருக்கிறார் அனிருத். அதற்கான காரணத்தையும் அவரே கூறி இருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சூதாட்ட புகாரில் சிக்கி 2016 மற்றும் 2017 ஆகிய 2 ஆண்டுகள் ஐபிஎல்லில் விளையாட முடியாமல் போனது. இதையடுத்து 2018-ஆம் ஆண்டு கம்பேக் கொடுத்த சென்னை அணிக்காக தீம் மியூசிக் போட்டுக்கொடுக்குமாறு சிஎஸ்கே நிர்வாகத்தினர் கேட்டிருக்கிறார்கள். ஆனால் நோ சொல்லிட்டாராம் அனி.

Anirudh Refuse to compose theme music for CSK

அதற்கு காரணம் என்னவென்றால், சிஎஸ்கே அணிக்கு ஏற்கனவே விசில் போடு என்கிற தீம் மியூசிக் உள்ளது. சிஎஸ்கே போட்டி என்றாலே விசில் போடு தீம் மியூசிக் இடம்பெறாமல் இருக்காது. அந்த அளவுக்கு அந்த தீம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனது. ஒரு சுயாதீன இசைக்கலைஞர் இசையமைத்த அந்த பாடலுக்கு அனிருத்தும் தீவிர ரசிகனாம். தோனி சிக்சர் அடிச்சாலோ அல்லது பவுண்டரி அடிச்சாலோ ஸ்டேடியத்தில் அந்த பாடல் ஒலிப்பதை கேட்கும் போது தனக்கே புல்லரிக்கும் என சிலாகித்து பேசியுள்ளார் அனிருத்.

Music Director Anirudh

தற்போது புதிதாக தான் எந்த ஒரு தீம் மியூசிக் போட்டாலும் அது விசில் போடுக்கு இணையாக வருவது சாத்தியமில்லை. இதன் காரணமாக தான் சிஎஸ்கே கொடுத்த தீம் மியூசிக் ஆஃபரை தான் நிராகரித்துவிட்டதாக அனிருத் கூறி இருக்கிறார். அவர் சொன்ன இந்த காரணத்தை கேட்டு வாயடைத்து போன ரசிகர்கள் என்ன மனுஷன் யா என அனிருத்தை பாராட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...  குக் வித் கோமாளி சீசன் 5 TRP-யை எகிற வைக்க... 3 பிக்பாஸ் போட்டியாளர்களை களமிறக்கும் விஜய் டிவி..!

click me!