6 வருடமாக உருவான ஆடுஜீவிதம் படத்துக்காக கம்மி சம்பளம் வாங்கிய அமலாபால்... அதுவும் இவ்வளவு தானா?

First Published Mar 27, 2024, 2:01 PM IST

மலையாளத்தில் உருவாகி உள்ள ஆடுஜீவிதம் படத்திற்காக நடிகை அமலா பால் வாங்கிய சம்பளம் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Aadujeevitham movie

மலையாள சினிமாவில் தொடர்ந்து தரமான படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த ஆண்டு பிரம்மயுகம், பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்த மலையாள சினிமா, அடுத்ததாக ஒரு பிரம்மாண்ட படைப்பை வெளியிட தயாராகி உள்ளது. அப்படத்தின் பெயர் தான் ஆடுஜீவிதம். இப்படத்தை பிளெஸி இயக்கி உள்ளார். இப்படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருக்கிறார்.

Amala Paul salary

ஆடுஜீவிதம் படம் சுமார் 16 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் உருவாகி இருக்கிறது. 2008-ம் ஆண்டு பென்மயின் எழுதிய ஆடுஜீவிதம் என்கிற நாவலை மையமாக வைத்து தான் இப்படத்தை இயக்கி உள்ளார் பிளெஸி. ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து தான் ஆடுஜீவிதம் நாவலை எழுதி இருந்தார் பென்மயின். அதை அப்படியே படமாக்க சுமார் 16 ஆண்டுகள் உழைத்திருக்கிறார் பிளெஸி.

இதையும் படியுங்கள்... Siddharth weds Aditi Rao Hydari : நடிகை அதிதி ராவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் நடிகர் சித்தார்த்

prithviraj sukumaran

திரைக்கதை எழுதும் பணியை 10 ஆண்டுகளில் முடித்து பின்னர் 2018-ம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினர். அது முடிவடைய கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆனது. தற்போது ஒருவழியாக கோட் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் வருகிற மார்ச் 29-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. இதற்கான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

amala paul salary for Aadujeevitham

இந்நிலையில், ஆடு ஜீவிதம் படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை அமலா பாலின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு இப்படத்தில் நடிக்க வெறும் ரூ.80 லட்சம் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் அமலா பால், இப்படத்தில் நடிக்க 6 ஆண்டுகளுக்கு முன்னரே கமிட் ஆனதால் அப்போது அவருக்கு கம்மியான தொகை வழங்கப்பட்டு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கர்ப்பமாக இருக்கும் அமலா பால், இப்படத்திற்கு கம்மியாக சம்பளம் வாங்கினாலும் அதனை முழு ஈடுபாட்டோடு புரமோஷன் செய்து வருவதை பார்த்து அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Ramcharan : பிறந்தநாளன்று பேமிலியோடு திருப்பதி கோவிலுக்கு விசிட் அடித்த ராம்சரண் - வைரலாகும் போட்டோஸ்

click me!