புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் – வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த கேகேஆர் வீரர்கள்!

First Published May 7, 2024, 2:13 PM IST

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 54ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

Kolkata Knight Riders, IPL, Kasi Viswanath Temple

லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 54ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் 137 ரன்கள் எடுத்து 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

IPL 2024, Kolkata Knight Riders

இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்ற நிலையில் புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியது. ராஜஸ்தான் ராயல்ஸ் நம்பர் 2 இடத்திற்கு சரிந்தது. இந்த நிலையில் இந்தப் போட்டிக்கு பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Kolkata Knight Riders

இந்தப் போட்டியைத் தொடர்ந்து கொல்கத்தாவில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 60ஆவது லீக் போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டிக்காக கேகேஆர் வீரர்கள் கொல்கத்தா புறப்பட்டு வர இருந்தனர். ஆனால், கொல்கத்தாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சார்ட்டர்டு விமானம் மோசமான வானிலை காரணமாக கவுகாத்திக்கு திருப்பிடவிடப்பட்டது.

Indian Premier League 2024

பின்னர் கொல்கத்தா வர ஒப்புதல் கிடைத்த நிலையில், தரையிறங்கும் போது சிக்னல் இல்லாத நிலையில் வாரணாசிக்கு திருப்பிவிடப்பட்டது. இதன் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் ஒருநாள் முழுவதும் வாரணாசியில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அடுத்த விமானம் இன்று பிற்பகல் தான் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கேகேஆர் வீரர்கள் வாரணாசியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!