Tiruvallur : திருவள்ளூர் அருகே செல்போன் பேசிக்கொண்டு மாடியில் நடந்துகொண்டிருந்த வாலிபர், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த வளர்புரம் கிராமத்தில் இயங்கி வரும் சானோ இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தில், அசாம் மாநிலத்தை சேர்ந்த அச்சம்ரோங்மெய் என்ற வடமாநில இளைஞர் ஒருவர் வேலை செய்து வருகிறார். இவர் மப்பேடு மேட்டுச்சேரி கிராமத்தில் சரவணன் என்பவர் வீட்டில் தங்கியிருந்த வடமாநில இளைஞர்களுடன் தங்குவதற்காக சென்றுள்ளார்.
undefined
அப்பொழுது. அந்த வீட்டின் மொட்டை மாடியில் அச்சம்ரோங்மெய் என்ற வடமாநில இளைஞர், செல்போன் பேசிக்கொண்டே சென்றுள்ளார். அப்பொழுது மாடியின் அருகே சென்ற மின் கம்பியை அவர் கவனிக்காமல் அருகே சென்றுள்ளார். அப்போது மின் கம்பி அவர் கழுத்துப் பகுதியில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மப்பேடு போலீசார். இறந்த அந்த வடமாநில இளைஞரின் பிரேதத்தைக் கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.