TN 11th Exam Result 2024 : நாளை வெளியாகும் 11ம் வகுப்பு ரிசல்ட்.. எப்படி பார்க்கலாம்? வெளியான முக்கிய தகவல்!

By Ansgar R  |  First Published May 13, 2024, 8:47 PM IST

TN 11th Exam Result 2024 : தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே 14ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.


தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்ளுக்கான 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலும் 3302 மையங்களில் நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7534 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்கள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 25 ஆயிரத்து 187 பேர் இந்த தேர்வை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். 

அவர்களில்  தனித்தேர்வர்களாக 4 ஆயிரம்  945 பேரும் எழுத அனுமதி அளிக்கப்பட்டது. அவர்களில் . சிறைவாசிகள் 187 பேர் அடங்குவர். சென்னை மாவட்டத்தில் உள்ள 591 பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரத்து 852  மாணவர்கள் 240 மையங்களில் தேர்வினை எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு தயார் நிலையில் உள்ளது. 

Tap to resize

Latest Videos

வனப்பகுதிக்குள் துள்ளி குதித்து ஓடிய புள்ளி மான்கள்; கோவை வஉசி பூங்காவில் பராமரிக்கப்பட்ட மான்கள் விடுவிப்பு

அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில், 11 ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மே 14ம் தேதி காலை 9.30 மணிக்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்படுகிறது என்றார் அவர். 

தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in மற்றும் www.results.digilocker.gov.in என்ற இணையதளங்களில்  பதிவு எண் மற்றும் பிறந்தத்தேதியை பதிவு செய்து தெரிந்துக் கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது அளித்த செல்போன் எண்களுக்கும் தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும் என அதில் கூறியுள்ளார் அவர். 

CBSE 10th RESULT: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது..எந்த இணையதளத்தில் பார்க்கலாம் தெரியுமா?

click me!