அட்சய திருதியை அன்று தங்க நகை வாங்க போறீங்களா..? அப்ப கண்டிப்பாக 'இந்த' விஷயங்களை தெரிஞ்சிகோங்க..!

First Published Apr 27, 2024, 12:08 PM IST

இந்த முறை அட்சய திருதியையை முன்னிட்டு தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தால், சில விஷயங்களை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அவை..

இந்தியாவில் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது வழக்கம். இந்த ஆண்டு அட்சய திருதியை விழா மே10ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் தங்கம் வாங்குவது நல்ல சகுனமாக கருதப்படுகிறது. நீங்களும் இந்த முறை அட்சய திருதியையை முன்னிட்டு தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தால், சில விஷயங்களை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அவை..

தூய்மை: தங்கம் வாங்கும் போது எப்போதும் தூய்மையை மனதில் கொள்ள வேண்டும். இதற்கு, நீங்கள் எப்போதும் ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளை மட்டுமே வாங்வது நல்லது. காரட்டைத் தவிர, தங்கத்தின் தூய்மையையும் அதன் நுணுக்கத்தால் சரிபார்க்கலாம். தங்கத்தின்  தூய்மையை சரிபார்த்த பிறகு வாங்கினால், எதிர்காலத்தில் அதை மறுவிற்பனை செய்வதில் எந்த சிக்கலையும் சந்திக்க மாட்டீர்கள்.

பில் அவசியம்: நீங்கள் ஒரு கிராம் தங்கம் வாங்கினால் கூட அதற்கு பில் கட்டாயம் அவசியம் அதுவும் அசல் பில் இருக்க வேண்டும். மேலும், பில்லில் வாங்கிய நகைகள், மேக்கிங் சார்ஜ், கற்களின் எடை மற்றும் விலை போன்ற முழுமையான விவரங்கள் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எடை போடும் போது கவனம்: எப்போது தங்கம் வாங்குகிறீர்களோ..அந்த நேரத்தில் வேறு எதிலும் பிஸியாக இருக்க வேண்டாம்.. உதாரணமாக, கடைக்காரர் எடை போடும்போது சிலர் போனில் பேசிக்கொண்டு  இருப்பார்கள். மேலும் நீங்கள் நகை வாங்கும் போது அதன் எடையை சரிபார்க்கவும். பல நேரங்களில் கடைக்காரர் தவறான தங்கத்தை எடை போட்டு உங்களை ஏமாற்றலாம்.

இதையும் படிங்க: Akshaya Tritiya 2024 : அட்சய திருதியை அன்று 'இத' மட்டும் செய்யுங்கள்.. வருடம் முழுவதும் செழிப்பு தான்!

தங்கம் விலை: பொதுவாகவே, நீங்கள் நகைகளை வாங்க செல்லும் முன் அந்நாளில் தங்கத்தின் விலை என்ன என்பதை அறிந்து கொள்வது மிகவும் நல்லது. காரணம், சர்வதேச சந்தைக்கு பொறுத்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தினமும் மாறிக்கொண்டே இருக்கும். எனவே, நீங்கள் தங்கத்தின் விலையை நன்கு அறிந்திருந்தால் மட்டுமே ஏமாற வாய்ப்பில்லை.

 இதையும் படிங்க :  அட்சய திருதியை 2024: எப்போது..? தங்கம் வாங்க நல்ல நேரம் எப்போது தெரியுமா..? 

கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகை: பொதுவாகவே கற்கள் பதிக்கப்பட்ட தங்கநகை பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஆனால் அதை வாங்குவது தவிர்ப்பது நல்லது. ஏனெனில், நீங்கள் கற்கள் பதித்த நகையை அடகு வைக்கும் போது அல்லது விற்கும் போது கற்களின் மதிப்பு பூஜ்ஜியம் ஆகும். மேலும் கற்கள் இல்லாத நகைகளை வாங்கினால் நகையின் மதிப்பு அப்படியே இருக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!