MODI : வெயில் அதிகமாக இருக்கு.. அதிக தண்ணீர் குடிங்க.. உடல் நலனில் கவனம் செலுத்தனும்- மோடி அட்வைஸ்

First Published | May 7, 2024, 9:54 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி, வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறினார். மேலும் பொதுமக்களுடன் உற்சாகமாக செல்பியும் எடுத்துக்கொண்டார். 
 

3ஆம் கட்ட தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. முதல் கட்டத்தில் 102 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டத்தில் 88 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. 3ஆம் கட்டத்தில் குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மோடி உற்சாகம்

இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை ராஜ்பவனில் இருந்து கார் மூலம் அகமதாபாத்தில் உள்ள நிஷான் வாக்குச்சாவடிக்கு சென்றார்.  அவரை அந்த தொகுதியின் பாஜக வேட்பாளர் அமித்ஷா வரவேற்றார். முன்னதாக வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் முன்பு தனது வாகனத்தில் இருந்து இறங்கியவர் வாக்குச்சாவடிக்கு நடந்து சென்றார்.வழி நெடுக கூடியிருந்த மக்களை பார்த்து மோடி கை அசைத்து கொண்டே வாக்குச்சாவடி நோக்கி சென்றார்.  

Tap to resize

pm modi vote.j

வாக்களித்த மோடி

அப்போது தன்னை ஓவியமாக வரைந்திருந்த ஒருவருக்கு அந்த ஓவியத்தின் கீழ் தனது கையொப்பத்தை இட்டுக் கொடுத்தார். அதேபோல் வாக்குச்சாவடிக்கு வெளியே நின்றிருந்த சிறுமி ஒருவருடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக் கொண்டார். 

PM Modi

பொதுமக்களுக்கு வாக்களிக்க விழிப்புணர்வு

இதனையடுத்து வாக்குச்சாவடிக்கு சென்றவர் அங்கு தனது அடையாள அட்டையை காண்பித்தார். இதனை தொடர்ந்து விரலில் மை வைத்தவுடன் தனது ஜனநாயக கடமையான வாக்கினை செலுத்தினார். இதனையடுத்து வெளியே வந்த மோடி வாக்களிப்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கை விரல் மையோடு பொதுமக்களிடம் காட்டிக்கொண்டு சென்றார்.

ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மோடி, நமது கலாச்சாரத்தில் தானம் மிகப்பெரிய முக்கியத்துவம் கொண்டுள்ளது. எனவே ஒவ்வொரு குடிமகனும் தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என தெரிவித்தார். நான் எப்போதுமே இந்த இடத்தில் தான் வாக்களிக்கிறேன். இத்தொகுதியில் அமித் ஷா போட்டியிடுகிறார். 

அதிக தண்ணீர் குடிங்க..

உலகின் ஜனநாயக நாடுகளுக்கு உதாரணமாக திகழ்கிறது இந்தியாவின் தேர்தல் நடைமுறை சுமார் 66 நாடுகளில் தேர்தல் நடைபெற உள்ளது அவை அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். தேர்தல்களின் நிலவரத்தை ஆய்வு செய்ய செல்லும் ஊடகத்தினர் உடல் நலனை கரை எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும் என்றும் உடல்நலனுக்கு நல்லது என தெரிவித்தார். மேலும்  இன்னும் 4 கட்ட  வாக்கு பதிவு நடைபெற உள்ளதாகவும் அப்போது தெரிவித்தார். 

Latest Videos

click me!