800 ரூபாய்க்கு ஏசி கிடைக்கும்! கோடையில் அதிகரிக்கும் வாடகை ஏசி பயன்பாடு!

First Published | May 5, 2024, 3:18 PM IST

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், நகர்புறங்களில் ஏசி மற்றும் ஏர் கூலர்களை வாடகைக்கு வாங்கி பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை கூடியிருக்கிறது.

Air Conditioner

சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஏசி மற்றும் ஏர் கூலர்களை வாடகைக்கு வாங்கி பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை கூடியிருக்கிறது. சிறிய அளவிலான நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு ஏசி வாடகைக்கு விடப்படுகிறது.

Air Conditioner

டவர் ஏசி, ஸ்பிலிட் ஏசி, போர்ட்டபிள் ஏசி, ஏர் கூலர் ஆகியவை வாடிக்கையாளர்களால் விரும்பப்படுகின்றன. பெங்களூருவில் ஏசியை நிறுவிக் கொடுக்கும் நிறுவனம் நடத்தும் அப்துல், வாடகை ஏசிக்கான தேவை கடந்த ஆண்டை விட இரு மடங்காக அதிகரித்துள்ளதாகச் சொல்கிறார்.

Tap to resize

Air Conditioner

தற்போது கையிருப்பில் இருந்த அனைத்து ஏசிக்களும் வாடகைக்கு எடுக்கப்பட்டுவிட்டன என்றும் அவர் கூறுகிறார். வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஐடி ஊழியர்கள் தனது முக்கிய வாடிக்கையாளர்கள் என்றும், அவர்கள் புதிய ஏசி வாங்குவதை விட, குறைந்த காலத்திற்கு வாடகைக்கு எடுப்பதை அவர்கள் விரும்புகிறார்கள் எனவும் தெரிவிக்கிிறார்.

Air Conditioner

வாடகை காலத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் விலை உச்சத்தை எட்டிவிடும். ஸ்டார் ரேட்டிங் அடிப்படையிலும் கட்டணங்கள் மாறும். 3 ஸ்டார் ஏசிகளை விட 5 ஸ்டார் ஏசிகள் விலை அதிகமாக இருக்கும்.

Air Conditioner

இந்த ஆண்டு ஏசி வாடகை சுமார் 60% உயர்ந்துள்ளது. இதற்கு முன் கோடை காலத்தில் மக்கள் ஏர் கூலர்களையே விரும்பினார்கள். இப்போது ஏர் கண்டிஷனர்களை வாடகைக்கு எடுப்பது அதிகரித்து வருகிறது.

Air Conditioner

பல இடங்களில் வாடிகை ஏசி ரூ.800 முதல் ரூ.1000 வரை மாத வாடகையில் கிடைக்கிறது. ஆன்லைனிலும் வாடகை ஏசி சேவை செயல்பட்டு வருகிறது. ஆன்லைனில் வாடகைக்கு வாங்கும்போது மாதத்திற்கு ரூ.1,300 முதல் ரூ.2,000 வரை கட்டணம் இருக்கும்.

Latest Videos

click me!