வாக்களித்த அடையாளத்தை காட்டினால் இலவச பீர், பட்டர் தோசை.. வாக்காளர்களை கவர அதிரடி அறிவிப்பு- எங்கே தெரியுமா.?

First Published Apr 26, 2024, 10:27 AM IST

வாக்குப்பதிவை அதிகரிக்கும் வகையில் கர்நாடகாவில் ஓட்டல், பார், வர்த்தக நிறுவனர்கள் பல வித அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இலவச பீர், இலவச உணவு போன்ற அறிவிப்பு வாக்காளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.  

விறு விறு வாக்குப்பதிவு

நாடாளுமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் உள்ள 13 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 88 தொகுதிகளில் நடைபெறும் வாக்குப்பதிவில் காலை முதல் வாக்காளர்கள் விறுவிறுப்பாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்கு சதவிகிதம் மிகவும் குறைவாக காணப்பட்டது. வெயிலின் தாக்கம் மற்றும் வாக்களிக்க விரும்பாத நிலையே நீடித்தது. தமிழகத்தில் மட்டும் சுமார் ஒரு கோடிக்கு மேல் வாக்குகள் செலுத்தவில்லை.

வாக்காளர்களை ஊக்குவிக்க திட்டம்

இந்த நிலையில் வாக்குப்பதிவை அதிகரிக்கும் வகையிலும் வாக்காளர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையிலும் பல்வேறு ஹோட்டல் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் புதிய வகை ஆபர்கள் அறிவித்துள்ளது. அந்த வகையில் வாக்காளர்கள் தங்களது வாக்காளர் வாக்கு செலுத்தியதற்கான அடையாள மை மற்றும் அடையாள அட்டையை  காண்பித்தால் அவர்களுக்கு இலவசமாக சுடசுட Butter Dosai, Gee Rice, பழச்சாறு என வாக்காளர்களை ஊக்கப்படுத்த offer-களை அள்ளி தெரித்திருக்கிறது.

தள்ளுபடி அறிவிப்பு

இதே போல வெண்டர்லா நிறுவனம் புதிய ஆஃபரை அறிவித்துள்ளது. அதன்படி வாக்குப்பதிவு தினத்தன்று  வாக்கு செலுத்தி விட்டு அதன் அடையாளத்தை காண்பித்தால் 10 முதல் 15 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ELECTION : இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..? முக்கிய வேட்பாளர்கள் யார்.? எத்தனை தொகுதிக்கு தேர்தல்.?

beer1.jp

வாக்காளர்களுக்கு இலவச பீர்

இந்த ஆஃபரை விட புதிய வகை சலுகை கர்நாடகாவில் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பாக  ஹடுபீசனஹள்ளியில் அமைந்துள்ள Deck of Brews என்ற பெயர் கொண்ட தனியார் மதுபானகூடம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி,  இன்று  (26ஆம் தேதி) நடைபெறும் தேர்தலில் வாக்களித்துவிட்டு, 27ஆம் தேதி மதுபானக் கூடத்திற்கு வரும் முதல் 50 நபர்களுக்கு இலவச பீர் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த செய்தி தற்போது பெங்களூரு மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றது.

ஜூஸ், நெய் லட்டு இலவசம்

மேலும் பெங்களூரு என்ருபதுருங்கா சாலையில் உள்ள நிசர்கா கிராண்ட் ஹோட்டலில் வாக்களித்துவிட்டு வாக்களித்ததற்கான அடையாளத்துடன் வரும் மக்களுக்கு, இலவசமாக கர்நாடகா ஸ்பெஷல் பென்னி காளி தோசை, நெய் லட்டு மற்றும் ஜூஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது. இது போன்ற அறிவிப்பு இளம் வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவ்வேற்பை பெற்றுள்ளது. 

நிர்மலா சீதாராமன், டிராவிட், மம்முட்டி, சுரேஷ் கோபி, வாக்குப்பதிவு.. விறுவிறுக்கும் இரண்டாம் கட்ட தேர்தல் களம்

click me!