லாரி மீது கார் மோதி விபத்து! 2 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல்நசுங்கி பலி!

First Published | Apr 17, 2024, 7:05 AM IST

நெல்லூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

Nellore Road Accident

அப்போது அதிவேகமாக சென்ற கார் முங்கமுரு என்ற இடத்தில் சாலையோரம் நின்று இருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 

Car Accident

Tap to resize

Police investigation

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 5 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos

click me!