Sonam Wangchuk: சோனம் வாங்சுக்கின் 21 நாள் உண்ணாவிரதப் போராட்டம் ஏன்? அரசு செவிசாய்க்குமா?

First Published Mar 25, 2024, 5:54 PM IST

லடாக்கைச் சேர்ந்த பொறியாளர் மற்றும் கல்வி சீர்திருத்தவாதியான சோனம் வாங்சுக், இப்பகுதியில் கல்வி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான புதுமையான அணுகுமுறைகளுக்கு பெயர் பெற்றவர். மார்ச் 6 அன்று, பூஜ்ஜிய வெப்பநிலையில் கடல் மட்டத்திலிருந்து 3,500 மீட்டர் உயரத்தில் தொடங்கிய வாங்சுக்கின் போராட்டம், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இமயமலைப் பகுதியின் சூழலியல் மற்றும் பனிப்பாறைகளுக்கு தொழில்மயமாக்கலால் ஏற்படும் சேதத்தைத் தடுக்க வலியுறுத்தியும் இவரது போராட்டம் நடைபெற்று வருகிறது.

Climate Fast in Ladakh

உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துமாறு ஆதரவாளர்கள் வேண்டுகோள் விடுத்த போதிலும், சோனம் வாங்சுக் தான் ஆரம்பத்தில் திட்டமிட்டபடி 21 நாட்களுக்கு உண்ணவிரதத்தைத் தொடர்வதாகக் கூறினார்.

Ladakh Statehood

சோனம் வாங்சுக் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் லே நகரில் தியாகிகள் நினைவு மைதானத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு சுமார் 3,000 பேர் தங்கள் ஆதரவைக் காட்ட வந்துள்ளனர் என்கிறார்.

Sonam Wangchuk Hunger Fast

சோனம் வாங்சுக், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணையை அமல்படுத்த வேண்டும் என்றும் கோருகிறார். இதன் மூலம் நில பாதுகாப்பு மற்றும் பழங்குடியின பகுதிகளுக்கு சுயாட்சி உறுதி செய்யப்படும் என்கிறார்.

Sonam Wangchuk in Ladakh

தெற்கில் உள்ள பெரிய தொழிற்சாலைகள் மற்றும் வடக்கில் சீன ஆக்கிரமிப்புகளால் பிரதான மேய்ச்சல் நிலத்தை இழக்க நேரிடுகிறது என்கிறார் சோனம் வாங்சுக். லடாக்கைச் சேர்ந்த 10,000 மேய்ப்பர்கள் மற்றும் விவசாயிகளுடன் சீன எல்லையை நோக்கிய பயணத்தை விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Sonam Wangchuk fasting for Ladakh statehood

லே மற்றும் கார்கிலுக்கு தனித்தனியாக மக்களவைத் தொகுதிகள் வேண்டும், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வேண்டும், லடாக்கில் உள்ள லே மற்றும் கார்கில் மாவட்டங்களுக்கு பொது சேவை ஆணையம் வேண்டும் என வாங்சுக் வலியுறுத்துகிறார்.

Sonam Wangchuk Climate Fast

தொழில்மயமாக்கலால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும் வாங்சுக் கவலை தெரிவிக்கிறார். உள்ளூர் மக்களைக் கலந்தாலோசிக்காமல் 13 ஜிகாவாட் திட்டத்தை அரசு திணிப்பதாக சோனம் வாங்சுக் விமர்சித்தார்.

Sonam Wangchuk Fasting

உடல்நிலை மோசமடைந்து வருவதால், தனது ஆதரவாளர்கள் வேலைநிறுத்தத்தை முன்கூட்டியே முடிக்குமாறு கேட்டுக் கொண்டதாக வாங்சுக் கூறினார். எனினும், 21 நாள் உண்ணாவிரதம் முடிவடைந்த பின்னர், மீண்டும் உண்ணாவிரதம் இருக்க போதுமான பலம் கிடைக்கும் வரை, உள்ளூர் மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அவர் சொல்கிறார்.

Activist Sonam Wangchuk

முன்பு ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த லடாக் இப்போது சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக உள்ளது. ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் இப்பகுதிக்கு நான்கு பிரதிநிதிகள் இருந்தனர். லடாக்கில் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளது.

click me!