இந்த டிஜிடல் யுகத்தில், டீ கடை முதல் காய்கறிகள் மார்கெட் தொடங்கி பெரிய பெரிய மால்களிலும் பலரும் யுபிஐ முறையை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இதனால் டிஜிட்டல் பணப்பரித்தனையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த சூழலில், தற்போது ரயில்வேயும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்து வருவதால், ரயில் நிலையங்களில் UPI மற்றும் QR குறியீடு வசதிகள் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன.
ரயில் பயணிகள் UTS மொபைல் செயலியில் அனைத்து ரயில்களுக்கும் முன்பதிவு செய்யப்படாத, நடைமேடை மற்றும் சீசன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்த செயலி Google Play Store இல் பதிவிறக்கம் செய்ய முடியும்.
அந்த வகையில் பல ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் QR குறியீடு நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் ஆன்லைனில் பணம் செலுத்தி டிக்கெட்டை பெற்லாம். பயணிகள் சீவான் மற்றும் மைர்வா ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் QR குறியீடு மூலம் டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்தலாம்.
இதன் மூலம் பயணிகள் டிக்கெட் பெறுவது எளிதாக இருக்கும். ரயில்வே அதிகாரிகள் இதுகுறித்து பேசிய போது “ சில்லறை தொடர்பாக டிக்கெட் கவுன்டரில் பரிவர்த்தனை செய்வதில் பயணிகளும், டிக்கெட் எழுத்தர்களும் அடிக்கடி பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். ஆனால், இப்போது பெரும்பாலான பயணிகளுக்கு இதுபோன்ற பிரச்னைகள் இருக்காது. மொபைல் பேங்கிங் செய்பவர்கள் QR குறியீடு மூலம் பணம் செலுத்தி டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும்.
யுடிஎஸ் ஆப் மூலம் பயணிகள் தங்களுக்கான பொது டிக்கெட்டுகளையும் வாங்கலாம் என்று பிஆர்ஓ அசோக் குமார் தெரிவித்தார். ரயில் நிலையத்தை அடையும் முன், பயணிகள் ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள மொபைல் செயலி மூலம் டிக்கெட்டுகளை வாங்கலாம். அதன் கட்டணத்தை UPI அல்லது நெட் பேங்கிங் மற்றும் கார்டு மூலம் செய்யலாம்.
மொபைல் செயலி மூலம் டிக்கெட்டுகளை வாங்குவதன் மூலம், பயணிகள் டிக்கெட் கவுண்டரில் வரிசையில் நிற்க தேவையில்லை. இதற்காக, பயணிகள் ரயில் நிலையத்திற்கு சென்றதும், நடைமேடைக்கு வெளியே நின்று, மொபைல் இருக்கும் இடத்தை ஆன் செய்து, யுடிஎஸ் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வார்கள் என்றார்.
UTS செயலியில் பதிவு செய்து உங்கள் விவரங்களை பதிவு செய்யவும். UPI, நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு வழியாக உங்கள் R-வாலட்டை ரீசார்ஜ் செய்ய வேண்டும். அதில் கேட்கப்படும் விவரங்களை முறையாக நிரப்பி கட்டணத்தை செலுத்த வேண்டும். யுபிஐ, நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு போன்ற கட்டண விருப்பங்களையும் நீங்கள் தேர்வு செய்யலாம்
UTS பயன்பாட்டில் "show ticket" விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், டிக்கெட்டுகளைப் பார்க்கலாம். ஆதார் அல்லது பொது முன்பதிவு கவுண்டரில் UTS செயலியில் பெறப்பட்ட முன்பதிவு ஐடியைப் பயன்படுத்தி காகித டிக்கெட்டுகளை அச்சிடலாம்.