ஜவஹர்லால் நேரு முதல் நரேந்திர மோடி வரை: இந்தியாவில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர்கள்!

First Published | Mar 7, 2024, 3:10 PM IST

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியாவில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

நாடாளுமன்ற 17ஆவது மக்களவையின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதையடுத்து, 18ஆவது மக்களவைக்கான பொதுத்தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி இருந்து வருகிறார். அதற்கு முன்பு, 2004 முதல் 2014 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமராக மன்மோகன் சிங் இருந்துள்ளார். அந்த வகையில், இந்தியாவில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஜவஹர்லால் நேரு

ஜவஹர்லால் நேரு (1947-1964)


சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, 1947-1964 வரை மொத்தம் 16 ஆண்டுகள் மற்றும் 286 நாட்கள் தொடர்ச்சியாக இந்தியாவின் பிரதமர் பதவியை வகித்துள்ளார். சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் அடையாளத்தை வடிவமைப்பதில் அவரது பங்கும், தலைமையும் முக்கியத்துவம் வாய்ந்தது.
 

Tap to resize

இந்திரா காந்தி (1966-1977, 1980-1984)


ஜவஹர்லால் நேருவின் மகள் இந்திரா காந்தி, மொத்தம் 15 ஆண்டுகள் 350 நாட்கள் இரண்டு முறை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்துள்ளார். 1966-1977 வரையும், பின்னர் 1980-1984 வரையும் அவர் பதவி வகித்துள்ளார். 1975இல் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது உட்பட அவரது வலுவான தலைமை மற்றும் சர்ச்சைக்குரிய முடிவுகளுக்காக அறியப்படுபவர் இந்திரா காந்தி. இந்தியாவின் இரும்புப் பெண்மனியாகவும் இந்தியா காந்தி போற்றப்படுகிறார்.
 

மன்மோகன் சிங் (2004-2014)


பொருளாதார நிபுணரும், புகழ்பெற்ற நபருமான மன்மோகன் சிங், 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை மொத்தம் 10 ஆண்டுகள் தொடர்ந்து இரண்டு முறை பிரதமராக பதவி வகித்துள்ளார். அவரது பதவிக்காலத்தில் குறிப்பிடத்தக்க பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தாராளமயமாக்கல் முயற்சிகளுக்காகவும் அவரது அரசாங்கம் அறியப்படுகிறது.

நரேந்திர மோடி (2014-2024 தற்போது வரை)

இந்தியாவின் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி, தற்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவி வகித்து வருகிறார். கவர்ச்சியான தலைமைக்கு பெயர் பெற்ற அவர், குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கை மாற்றங்களுக்காக அறியப்படுகிறார். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாராட்டைப் பெற்ற அவரது முதல் பதவிக்காலம் 2014 முதல் 2019 வரை. அவரது இரண்டாவது பதவிக்காலம் 2019ஆம் ஆண்டில் தொடங்கியது.

அடல் பிஹாரி வாஜ்பாய் (1996, 1998-2004)


திறமையான பேச்சாளரும் தொலைநோக்கு பார்வையும் கொண்ட தலைவராக அறியப்படும் அடல் பிஹாரி வாஜ்பாய் மூன்று முறை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்துள்ளார். அணுகுண்டு சோதனை மற்றும் பாகிஸ்தானுடன் அமைதியை வளர்ப்பதற்கான அவரது முயற்சிகளுக்காக அவர் நினைவுகூரப்படுகிறார்.
 

Latest Videos

click me!