தங்கையை திருமணம் செய்யும் அண்ணன்... விசித்திரமான பாரம்பரியம்.. நம்ம இந்தியாவில் தான்!

Published : Feb 27, 2024, 02:10 PM ISTUpdated : Feb 27, 2024, 02:21 PM IST

இந்த கிராமத்தில் அண்ணன் தங்கை திருமணம் செய்து கொள்கிறார்கள். காரணம் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்..

PREV
16
தங்கையை திருமணம் செய்யும் அண்ணன்... விசித்திரமான பாரம்பரியம்.. நம்ம இந்தியாவில் தான்!

திருமணம் என்பது இரண்டு குடும்பங்களின் சங்கமாகும். பல்வேறு இடங்களில் வெவ்வேறு கலாச்சாரங்களில் வெவ்வேறு வகையான திருமணங்கள் நடைபெறும். அவற்றில் சில திருமண சடங்குங்கள் நாகரீக சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அந்தவகையில், உலகில் இருக்கும்
சில பழங்குடி சமூகங்கத்தின் திருமண பழக்கவழக்கங்கள் எல்லாவற்றையும் விட ரொம்பவே வித்யாசமானது என்றே சொல்லலாம். ஏனெனில், அவர்களது குருட்டு நம்பிக்கைகளையும், மதிப்புகளையும் பிரதிபலிக்கும் விதமாக எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன.

26

பொதுவாகவே, நாம் வாழும் இந்தியாவில் குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. பெற்றோர்-குழந்தை உறவு, சகோதர-சகோதரி உறவு, கணவன்-மனைவி உறவு என நம் நாட்டில் இருக்கும் உறவுகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். அந்த அளவுக்கு அது பெரியது. இவை அனைத்திற்கும் சமூகத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால், அண்ணன்-தங்கை உறவுமுறையை, கணவன்-மனைவி உறவு என்று பட்டம் சூட்டியுள்ளது 
ஒரு கிராமம்.

36

நம் இந்திய கலாச்சாரத்தில் குடும்பம் மற்றும் திருமண முறை ரொம்பவே விசேஷமானது மற்றும் பெரும்பாலான பகுதிகளில் ஒரேமாதிரியான முறையில் தான் உறவுகள் பின்பற்றப்படுகிறது. மேலும் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஆண்கள் அத்தையின் மகள், மாமன் மகள், சகோதரியின் மகள் ஆகியோரை திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் உள்ளது.

46

ஆனால், இந்தியாவில் இருக்கும் ஒரு பழங்குடி சமூகத்தில், ஆண்கள் தங்கள் சகோதரிகளையே திருமணம் செய்து கொள்கிறார்கள். அதாவது, ஒரே தாய் வயிற்றில் பிறந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த நடைமுறை பல ஆண்டுகளாகவே   செய்து வருகின்றனர். அது எங்கு தெரியுமா?

இதையும் படிங்க:   இது என்ன நூதனமா இருக்கு? இந்த ஊரில் புதுமண தம்பதிகள் சுடுகாட்டில் தான் முதல் பூஜை செய்வார்களாம்!

56

அது சத்தீஸ்கர் தான். இங்கு "துருபா" என்ற பழங்குடி சமூகம் உள்ளது. இவர்கள் சாதாரண மக்களிடமிருந்து சற்று மாறுபட்ட வாழ்க்கை முறையை வாழ்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகமாகவே உள்ளது. இந்த பழங்குடி சமூகத்தின் படி, ஒரே தாய்க்கு பிறந்த ஆண் பெண் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். மேலும், இவர்கள் அண்ணன் - தங்கை, அக்கா - தம்பி என்ற உறவில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இதையும் படிங்க:  Viral Video: புது மாப்பிள்ளைக்கு சிகரெட், பான் மசாலா கொடுத்து வரவேற்கும் மாமியார்!

66

இவர்கள் ஏன் இந்த கலாச்சாரத்தை கடைப்பிடிக்கிறார்கள் என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. குறிப்பாக, இவர்கள் தங்களுடைய சகோதர சகோதரிகளை திருமணம் செய்ய மறுத்தால், அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இவர்களின், கலாச்சாரத்திற்கு கடுமையான ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் சமூகத்தின் எண்ணிக்கையை  அதிகரிக்க இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றுவதாக கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!

Recommended Stories