மும்பையில் புத்துயிர் பெற்ற அந்தேரி கோகலே ரயில்வே மேம்பாலம்! திறப்பு தேதி எப்போது?

First Published | Feb 5, 2024, 3:01 PM IST

மும்பையில் புனரமைக்கப்பட்டுள்ள கோகலே ரயில்வே பாலம் பிப்ரவரி மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது. பழமையான இந்த ரயில்வே பாலம் இடிக்கப்பட்டு, நகரின் இரண்டாவது பெரிய பாலமாக புதுவடிவம் பெற்றுள்ளது.

Gopal Krishna Gokhale Railway Overbridge

மும்பை மாநகராட்சி நிர்வாகம் அந்தேரியில் உள்ள கோபால கிருஷ்ண கோகலே பாலத்திர் கான்கிரீட் சாலைகளை அமைக்கும் பணிகள் நிறை பெற்றுவிட்டதாகக் கூறியுள்ளது. மும்பை மாநகராட்சி அதிகாரிகளின் கூற்றுப்படி, பிப்ரவரி இறுதிக்குள் கோகலே பாலம் வாகன போக்குவரத்துக்காக திறக்கப்பட உள்ளது.

Mumbai Andheri Railway Overbridge

கோகலே பாலத்தில் கான்க்ரீட் சாலை அமைக்கும் பணி கடந்த வாரம் தொடங்கப்பட்டு ஜனவரி 28ஆம் தேதி நிறைவடைந்தது. கோகலே பாலம் திறக்கப்பட்ட பின்பு முதற்கட்டமாக பாலத்தின் ஒருபுறத்தில் மட்டுமே வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

Tap to resize

Mumbai Gokhale Bridge

கோகலே பாலம் கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இரண்டு வாகனப் பாதைகளைக் கொண்டிருக்கும். பிப்ரவரி 26 ஆம் தேதி பாலம் வாகனப் போக்குவரத்துக்கு திறக்கப்பட வேண்டும் கூறுகின்றனர்.

Andheri Gokhale bridge

கோகலே பாலத்தின் முதல் ஓபன்-வெப்-கர்டரை (OWG) தொடங்குவதற்கான செயல்முறை கடந்த டிசம்பர் 3ஆம் தேதி தொடங்கியது. OWG இன் எடை தோராயமாக 1,300 மெட்ரிக் டன்கள் ஆகும்.

கோகலே ரயில்வே மேம்பாலம் 90 மீட்டர் நீளம் கொண்டது, இது கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள வித்யாவிஹார் (99.8 மீட்டர்) பாலத்துக்குப் பிறகு மும்பையின் இரண்டாவது மிக நீளமான ரயில்வே பாலமாக உள்ளது. இடிக்கப்பட்ட பழைய கோகலே பாலம் 77 மீட்டர் நீளம் கொண்டிருந்தது.

புனரமைப்பு

கோகலே ரயில்வே பாலம் உறுதியற்ற தன்மை காரணமாக நவம்பர் மாதம் மூடப்பட்டது. டிசம்பரில் இடிக்கப்பட்டது. பின்னர் ஜனவரியில் பாலத்தின் புனரமைப்புப் பணிகள் தொடங்கின.

Mumbai Andheri Railway Overbridge

கோகலே ரயில்வே மேம்பாலம் 90 மீட்டர் நீளம் கொண்டது, இது கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள வித்யாவிஹார் (99.8 மீட்டர்) பாலத்துக்குப் பிறகு மும்பையின் இரண்டாவது மிக நீளமான ரயில்வே பாலமாக உள்ளது. இடிக்கப்பட்ட பழைய கோகலே பாலம் 77 மீட்டர் நீளம் கொண்டிருந்தது.

Gopal Krishna Gokhale Railway Overbridge

கோகலே ரயில்வே பாலம் உறுதியற்ற தன்மை காரணமாக நவம்பர் மாதம் மூடப்பட்டது. டிசம்பரில் இடிக்கப்பட்டது. பின்னர் ஜனவரியில் பாலத்தின் புனரமைப்புப் பணிகள் தொடங்கின.

Latest Videos

click me!