ரயில்வே லோயர் பர்த் விதிமுறையில் மாற்றம்! இனி இவங்களுக்கு மட்டும் தான் கிடைக்கும்!

First Published | Jan 29, 2024, 2:51 PM IST

ரயில் டிக்கெட் புக் செய்யும்போது லோயர் பர்த் ஒதுக்குவதில் பின்பற்றப்படும் விதிமுறைகள் மாறியுள்ளன. ஏற்கெனவே இருந்த நடைமுறையுடன் புதிய விதிமுறைகளை கடைபிடிக்க உள்ளதாக என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில் டிக்கெட் புக் செய்யும்போது லோயர் பர்த் ஒதுக்குவதில் பின்பற்றப்படும் விதிமுறைகள் மாறியுள்ளன. ஏற்கெனவே இருந்த நடைமுறையுடன் புதிய விதிமுறைகளை கடைபிடிக்க உள்ளதாக என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

train 6.j

இனி ரயில்களில் லோயர் பர்த் ஒதுக்கும் போது கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என இந்திய ரயில்வே கூறியுள்ளது.

Latest Videos


லோயர் பர்த் இருக்கையில் வயதான பெண்களோ கர்ப்பிணிப் பெண்களோ பயணித்தால் நடு பர்த்தில் இருப்பவர்கள் இரவு 10 மணிக்கு மேல் தான் தூங்க வேண்டும். அதுவரை லோயர் பெர்த்தில் இருப்பவர் அமர்ந்திருக்கலாம். அதாவது 10 மணிவரை மிடில் பர்த்தைத் தூக்கி  படுக்கையாக்கக் கூடாது.

லோயர் பர்த்தில் இருப்பவர் 10 மணிக்கு முன்பே தூங்க சம்மதம் தெரிவித்தால் தாராளமாக மிடில் பர்த்தை பயணிகள் தூங்கிக் கொள்ளலாம். இல்லாவிட்டால் 10 மணிவரை காத்திருந்து அதற்குப் பிறகு தான் மிடில் பெர்த்தில் தூங்கலாம்.

அப்பர் பர்த் பயணிகளுக்கு இந்த விதிமுறைகளால் எந்த பிரச்சினையும் இருக்காது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மேல் பர்த்துக்குச் சென்று படுத்துக்கொள்ளலாம். ஆனால் 10 மணிக்கு மேல் லைட் எரியக் கூடாது என்று வழக்கமான விதிமுறையும் உண்டு.

இந்திய ரயில்வே கொண்டுவந்துள்ள இந்த புதிய விதிமுறைகள் கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!