இனி இந்த பயணிகளுக்கு மட்டுமே ரயிலில் லோயர் பெர்த் கிடைக்கும்.. ரயில்வேயின் புதிய விதிகள்..

Published : Jan 10, 2024, 03:05 PM IST

ரயிலின் லோயர் பெர்த் குறிப்பிட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரயிலின் கீழ் இருக்கை யாருக்கு கிடைக்கும் என்று பார்க்கலாம்.

PREV
17
இனி இந்த பயணிகளுக்கு மட்டுமே ரயிலில் லோயர் பெர்த் கிடைக்கும்.. ரயில்வேயின் புதிய விதிகள்..

ஆசியாவிலேயே 2-வது மிகப்பெரிய நெட்வொர்காக இந்திய ரயில்வே உள்ளது. வசதியான, பாதுகாப்பான பயணம், டிக்கெட் விலை குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். எனவே ரயில் பயணிகள், தங்களுக்குப் பிடித்த இருக்கையைப் பெற, ஒரு மாதத்திற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய தொடங்குகின்றனர்.

27

பெரும்பாலான மக்கள் லோயர் பெர்த்தில் பயணம் செய்யவே விரும்புவார்கள். ஆனால் இனி எல்லோராலும் லோயர் பெர்த்-ஐ முன் பதிவு செய்ய முடியாது. ஆம், இதற்கான உத்தரவை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. ரயிலின் லோயர் பெர்த் குறிப்பிட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலின் கீழ் இருக்கை யாருக்கு கிடைக்கும் என்று பார்க்கலாம்.

37
train fine

மாற்றுத்திறனாளிகளுக்கு லோயர் பெர்த்தை ஒதுக்கி உள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. அவர்களின் பயணத்தை மேலும் வசதியாக மாற்ற, இந்திய ரயில்வே இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.

47
Trains Cancelled

ரயில்வே வாரியத்தின் உத்தரவின்படி, ஸ்லீப்பர் வகுப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு இருக்கைகள், இரண்டு கீழ், இரண்டு மிடில் இருக்கைகள், மூன்றாவது ஏசியில் இரண்டு இருக்கைகள் மற்றும் ஏசி3 எகானமியில் இரண்டு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இருக்கையில் அவரும் அல்லது அவருடன் பயணம் செய்பவர்களும் அமரலாம்.

57

அதே நேரத்தில், கரிப் ரத் ரயிலில், 2 லோயர் இருக்கைகள் மற்றும் 2 மேல் இருக்கைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இருக்கைகளுக்கு அவர்கள் முழுக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இவற்றைத் தவிர, இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கு அதாவது வயதானவர்களுக்கு லோயர் பெர்த்களை வழங்குகிறது.

67

45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, ஸ்லீப்பர் வகுப்பில் 6 முதல் 7 லோயர் பெர்த்களும், மூன்றாம் ஏசியின் ஒவ்வொரு பெட்டியிலும் 4-5 லோயர் பெர்த்களும், இரண்டாவது ஏசியின் ஒவ்வொரு பெட்டியிலும் 3-4 லோயர்பெர்த்களும் ரயிலில் ஒதுக்கப்பட்டுள்ளன. 

77

அதே சமயம், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் அல்லது கர்ப்பிணிப் பெண்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் போது மேல் இருக்கை வழங்கப்பட்டால், அவர்கள் ரயிலில் பயணம் செய்யும் போது டிக்கெட் பரிசோதகர் அவர்களுக்கு லோயர் இருக்கை வழங்குவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories