
சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு, அந்த உணர்ச்சிகரமான தருணத்தில், பிரதமர் மோடி இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத்தை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறினார்.
தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி சென்னையில் மாற்றுத்திறனாளியான பாஜக தொண்டர் ஒருவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
சென்னையில் வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி ரயிலில் பயணித்த மாணவ மாணவியருடன் கலந்துரையாடுகிறார்.
தலைநகர் டெல்லியில் லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில் வளர்க்கும் பசு மாடுகளுடன் பிரதமர் மோடி.
அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு பிரதமர் மோடி தனது லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் விருந்து அளித்து உபசரித்தார்.
பித்தோராகரில் உள்ள குஞ்சி கிராமத்திற்குப் போன பிரதமர் மோடி அங்கிருந்த மூதாட்டிகளிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.
இமாச்சல பிரதேச மாநிலத்திற்குச் சென்றபோது லெப்சா என்ற இடத்தில் நாய்களுக்கு உணவு ஊட்டுடிய பிரதமர் மோடி.ன
மத்தியப் பிரதேசத்தில் வயதான பாஜக தொண்டர் ஒருவரின் வாக்கிங் ஸ்டிக் கைநழுவி கீழே விழுந்தபோது, அதை எடுத்துக் கொடுத்து உதவுகிறார் பிரதமர் மோடி.
பாஜகவின் தொண்டர்களுடன் உரையாடும் பிரதமர் மோடி. கர்நாடகாவின் கோலார் பகுதிக்குச் சென்றபோது இந்த உரையாடல் நடத்தது.
இந்தியாவுக்கு வந்த ஜெர்மனியின் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் இந்திய உணவுகளை ருசித்துப் பார்க்கிறார். அவருக்கு அருகில் பிரதமர் மோடி.
நவீன வசதிகளுடன் கூடிய புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழாவின்போது செங்கோலை எடுத்துச் செல்லும் பிரதமர் மோடி.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஷாதோலில் உள்ள பகாரியா என்ற கிராமத்தில் உஜ்வாலா திட்டத்தில் பயன்பெற்ற குடும்பத்தினருடன் உரையாடுகிறார் பிரதமர் மோடி
அயோத்தியில் பிரதமர் உஜ்வாலா பயனாளியின் வீட்டில் ஒரு கோப்பை தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் பிரதமர் மோடி
பாரதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி டெல்லியில் கலந்து கொண்டார்
யஷோபூமியில் 'பிஎம் விஸ்வகர்மா' யோஜனா துவக்க விழாவில் விஸ்வகர்மாக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் (HAL) நிறுவனத்தில் தேஜாஸ் விமானத்தில் பயணம் செய்த பிரதமர் மோடி.
பிரான்சில் பாஸ்டில் தினம் 2023 கொண்டாட்டத்தின் போது பிரதமர் மோடி தனது நல்ல நண்பரான பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடன்.
உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்
அகமதாபாத்தில் உள்ள ரோபோடிக் பூங்காவுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கிருக்கும் ரோபோ ஒன்று தேநீர் பரிமாறியபோது...
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பார்வதி குண்ட் பகுதியில் தனிமையாக அமர்ந்து பிரதமர் மோடி பிரார்த்தனை செய்யும் காட்சி.
பிகானரில் ரோட் ஷோவின் போது மழையில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு மத்தியில் பிரதமர் மோடியின் கான்வாய் பயணம்
மும்பையில் உள்ள மரோலில் உள்ள அல்ஜமியா-துஸ்-சைஃபியா (தி சைஃபி அகாடமி) புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
COP28 உச்சி மாநாட்டின் போது, பிரதமர் மோடியுடன் இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி செல்ஃபி எடுத்துக் கொண்டார்.