டெல்லி
ஒரு நாள் கடுமையான வெப்ப அலை வீசினால் டெல்லியில் இறப்பு விகிதம் 12.2% அதிகரிக்கிறது. இதுவே தொடர்ச்சியாக ஐந்து நாள் நீடித்தால் தினசரி இறப்பு விகிதம் 19.4% ஆக உயர்கிறது.
மும்பை
10-நகர ஆய்வில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு இறப்புகளில் நீடித்த வெப்ப அலைகளின் தாக்கத்தை மதிப்பிடுகிறது. தொடர்ச்சியான தீவிர வெப்ப அலைகள் இறப்பு விகிதங்களை அதிகரிக்கின்றன என்று கண்டறிந்துள்ளது.
சென்னை
சென்னையில் இரண்டு நாள் வெப்ப அலை நீடித்தால் இறப்பு விகிதம் 14.7 சதவீதம் அதிகரித்துள்ளது. அதற்கு மேல் நீடிக்கும் தீவிர வெப்ப அலைகள் இறப்பு விகிதத்தை 33.3 சதவீதம் அதிகரிக்கச் செய்கின்றன.
ஹைதராபாத்
ஹைதராபாத்தில் ஆண்டுக்கு சராசரியாக 4 வெப்ப அலை நாட்கள் ஏற்படுகின்றன. கடுமையான வெப்ப அலைகள் ஹைதராபாத்தில் இறப்பு விகிதத்தை அதிகரிக்கின்றன என்பதையும் ஆய்வு காட்டுகிறது.
பெங்களூரு
நீடித்த வெப்ப அலைகள் பெங்களூருவிலும் இறப்பு விகிதத்தை உயர்த்துகிறது. பாதிப்பைக் குறைக்க அரசு வெப்ப அலையின் தீவிரத்தை அறிந்து, திட்டமிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.
அகமதாபாத்
அகமதாபாத் நகரும் தீவிர வெப்ப அலைகளை எதிர்கொள்கிறது. இந்நகரில் ஐந்து நாட்களில் இறப்பு விகிதம் 33.3 சதவீதம் அதிகரிக்கிறது.
புனே
புனேவில் ஆண்டுக்கு சராசரியாக 4.3 வெப்ப அலைகள் ஏற்படுகின்றன. இதனால் ஏற்படும் பாதிப்பைக் கருத்தில் கொண்டு புனே நகர நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆய்வில் கூறப்படுகிறது.
வாரணாசி
வாரணாசி நகரில் மூன்று வெப்ப அலை நாட்களில் இறப்பு விகிதம் 17.8 சதவீதம் கூடுகிறது. விரிவான திட்டமிடலுடன் வெப்ப அலை தாக்கங்களைப் புரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வு எடுத்துரைக்கிறது.
சிம்லா
சிம்லாவில் அதிகபட்ச வெப்பநிலை 3.8 சதவீதம் அதிகரித்துள்ளது. சிம்லாவில் வெப்ப நிலை அதிகரிப்பு வெப்ப அலையால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வது பற்றி சிந்திக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டுகிறது.
கொல்கத்தா
கொல்கத்தாவில் 3 நாள் வெப்ப அலை நீடித்தால் இறப்பு விகிதம் 17.8 சதவீதம் அதிகமாகிறது. வெப்ப அலையின் தாக்கத்தைப் மதிப்பிட்டு அதன்படி, கொள்கை உருவாக்கம் மற்றும் திட்டமிடல் மூலம் பாதிப்பைக் குறைக்கலாம் என்று ஆய்வு பரிந்துரை செய்கிறது.