Viral Video: புது மாப்பிள்ளைக்கு சிகரெட், பான் மசாலா கொடுத்து வரவேற்கும் மாமியார்!
குஜராத் கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்புச் சடங்கில் புது மாப்பிள்ளைக்கு மாமியார் சிகரெட் பற்ற வைக்கும் வீடியோ வைரலாகப் பரவுகிறது.
குஜராத்தில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் புது மாப்பிள்ளையை சிகரெட்டும் பான் மசாலாவும் வழங்கி வரவேற்கும் வீடியோ வைரலாகப் பரவுகிறது.
இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில் உறவினர்கள் முன்னிலையில், சோபாவில் அமர்ந்திருக்கும் மணமகனுக்கு அவரது மாமியார் வாயில் சிகரெட்டை வைக்கிறார். மாமனார் அந்த சிகரெட்டைப் பற்ற வைப்பது போல் பாவனை செய்கிறார். பின் அவரே சிகரெட்டை மணமகன் வாயில் இருந்து எடுத்துவிடுகிறார்.
பாரம்பரிய திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இனிப்பு வகைகளுடன் பான் மசாலாவும் சிகரெட்டும் வழங்கி வரவேற்கிறார்கள் என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
145 ஆண்டுகளாக மெனுவை மாற்றாத பழமையான ஹோட்டல்!
இது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டுவரும் நிலையில், இந்தச் சம்பவம் எந்த ஊரில் நடந்தது என்று தெரியவரவில்லை. ஆனால், குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்றதாகச் சொல்லப்படுகிறது. இந்த வீடியோவை பற்றி பலவிதமான கருத்துகளை நெட்டிசன்கள் கூறிவருகிறார்கள்.
ஒருவர் தயவுசெய்து சிகரெட்டை பயன்படுத்தாதீர்கள் என்கிறார். இன்னொருவர், புகைபிடிப்பதால் புற்றுநோய் ஏற்படும். மீடியாவில் கவனம் பெறவேண்டும் என்பதற்காகத்தான் இப்படிச் செய்கிறார்கள் என்று கண்டனம் தெரிவிக்கிறார். இப்படிச் சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் சில இது நாட்டின் பல பகுதிகளில் பாரம்பரியமாக பின்பற்றப்படும் சடங்கு என்றும் சொல்கிறார்கள்.
Facebook Fake ID: மனைவியின் நிர்வாணப் படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட கணவர்!
பீகார், ஒரிசா மாநிலங்களிலும் இதே போன்ற சடங்கு நடைபெறுவதாக சிலர் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இன்னொருவர் குஜராத்தின் தென்பகுதியில் உள்ள கிராமங்களில் இந்தச் சடங்குகள் செய்யப்படுவது வழக்கம் என்கிறார்.
மணமகனை நிஜமாகவே புகைபிடிக்க வைப்பது இல்லை. ஒரு சடங்குக்காக ஒரு பாவனையாகத்தான் சிகரெட், பான் மசாலா ஆகியவை கொடுக்கப்படுகின்றன. இந்த வீடியோவில்கூட புகைபிடிப்பது போல இல்லை என்று மற்றொரு நெட்டிசன் சுட்டிக்காட்டுகிறார்.
Qatar Cabins: துருக்கி, சிரியாவுக்கு 10 ஆயிரம் ரெடிமேட் வீடுகள் வழங்கும் கத்தார்