கணவரே மனைவி பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி மனைவியின் நிர்வாணப் படங்களை வெளியிட்டிருக்கிறார்.

பணி நிமித்தமாக வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர் மனைவியின் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி அவரது நிர்வாணப் படங்களை பகிர்ந்துள்ளார்.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த இரண்டு ஆண்டுக்களுக்கு முன் திருமணம் ஆனது. திருமணத்துக்குப் பின் கணவர் வீட்டுக்குச் சென்ற பெண், அங்கு தானும் கணவரும் தனியாக வசிக்க மொட்டை மாடியில் தனி அறை கட்டவேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

இதற்கு கணவரும் அவரது குடும்பத்தினரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதம் நடந்திருக்கிறது. இதனால், அந்தப் பெண் கணவர் வீட்டைவிட்டுச் சென்று பெற்றோருடன் வசிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்த நேரத்தில் அவருது கணவர் வெளிநாட்டில் வேலை கிடைத்துச் சென்றுவிட்டார்.

அன்புஜோதி ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை.! மாயமான 14 பேர் நிலை என்ன.? முக்கிய நபரை அலேக்கா தூக்கிய போலீஸ்

வெளிநாட்டுக்குச் சென்ற கணவர் தன் நண்பர் ஒருவருடன் சேர்ந்து மனைவியின் பெயரில் போலியான பேஸ்புக் கணக்கு தொடங்கி இருக்கிறார். அதில் மனைவியின் நிர்வாணமான படங்களைப் பதிவிட்டு வந்திருக்கிறார். இதனை அறிந்த அந்தப் பெண் சைபர் க்ரைம் பிரிவு காவல்துறையினரிடம் 8 மாதங்களுக்கு முன்பே புகார் கொடுத்திருக்கிறார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்தப் பெண் கூறுகிறார்.

இந்நிலையில், அந்தப் பெண் நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகரை நேரில் சந்தித்து புதிய புகார் மனுவை அளித்துள்ளார். தன் கணவர் மற்றும் அவரது நண்பரை வெளிநாட்டில் இருந்து வரவழைத்து கைது செய்யவேண்டும் என அந்தப் பெண் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை; மகிளா நீதிமன்றம் அதிரடி