அன்புஜோதி ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை.! மாயமான 14 பேர் நிலை என்ன.? முக்கிய நபரை அலேக்கா தூக்கிய போலீஸ்
விழுப்புரத்தில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து, அந்த ஆசிரமத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
ஆசிரமத்தில் பாலியல் கொடுமை
விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே உள்ள குண்டலபுலியூரில் இயங்கி வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆன்பு ஜோதி ஆசிரமம் உரிய அனுமதி பெறாமல் கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது. இதில் அனுமதிக்கப்பட்ட பெண்களை போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. விவசாய வேலைகளுக்கு பயன்படுத்துவது, மாடு மேய்க்க விடுவது, அப்படி செய்யாதவர்களை சங்கிலியால் அடித்து சித்தரவதைகளுக்கு உள்ளாக்குவது, குரங்குகளை விட்டு கடிக்க விடுவது, வெளிமாநிலங்களுக்கு கடத்துவது உள்ளிட்ட மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆசிரம நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்கு
இந்த முறைகேடுகள் வெளியே தெரியாத நிலையில் திருப்பூரைச் சேர்ந்த ஹனிதீன் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு ஜபாருல்லா என்பவரை (45 வயது) ஆசிரமத்தில் சேர்த்து விட்டுள்ளார். ஓராண்டு கழித்து அவரை பார்க்கச் சென்ற போது ஜபாருல்லா காணவில்லை. இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து , வருவாய் துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கடந்த 10ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தியதில் இந்த முறைகேடுகள் தெரியவந்துள்ளது. சமூக நல அலுவலர் ராஜாம்பாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், மேலும் ஆசிரம மேலாளர் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
முக்கிய நிர்வாகி கைது
ஆசிரம பணியாளர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குரங்கு தாக்கி காயமடைந்த ஆஸ்ரம நிர்வாகி அன்பு ஜூபின் மற்றும் உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் அவரது மனைவி மரியா ஜூபின் ஆகிய இருவரும் சிகிச்சையில் இருப்பதால் அவர்களை கைது செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில் உடல் நலம் சரியான முக்கிய குற்றவாளி மரியா ஜுபினை செஞ்சி போலீசார் கைது செய்து விசாரணைக்காக கெடார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர் சிகிச்சையில் இருந்து வரும் அன்பு ஜூபின் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
இதையும் படியுங்கள்