பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை.! குரங்குகளை வைத்து கடிக்க வைக்கும் கொடூரம்..! ஆசிரமத்தில் நடந்தது என்ன.?

விழுப்புரத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த ஆசிரமத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 

Anbu Ashram, which was operating in Villupuram without permission, has been sealed

ஆதரவற்றோர்களுக்கான ஆசிரமம்

விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே உள்ள குண்டலபுலியூரில் இயங்கி வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆசிரமத்தில் கடந்த 2021 டிசம்பர் மாதம் அமெரிக்க வாழ் தமிழர் சலீம் கான் தனது மாமனார் ஜவஹிருல்லாவை சேர்த்துள்ளார். இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் தனது மாமாவை சந்திக்க சலீம் அந்த ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஜவஹிருல்லா இல்லாததால் அதிர்ச்சி அடைந்த சலீம் ஆசிரம நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தால் சலீம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 7 லட்சம் பணம், 13 சவரன் நகை கொள்ளை

Anbu Ashram, which was operating in Villupuram without permission, has been sealed

ஆசிரமத்தில் அதிகாரிகள் ஆய்வு

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவையடுத்து  அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு போலீசாரும், வருவாய் துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கடந்த 10ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் உரிய அனுமதியின்றி ஆசிரமம் செயல்பட்டு வந்ததும், ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் உரிய முறையில் பரமாரிக்காமல் சங்கிலியால் கட்டப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.  இதன் அடுத்த கட்டமாக சமூக நல அலுவலர் ராஜாம்பாள் கொடுத்த புகாரின் அடிப்படையில்,

Anbu Ashram, which was operating in Villupuram without permission, has been sealed

16 பேரை காணவில்லை

ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், மேலும் ஆசிரம மேலாளர் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட அன்பு ஜோதி ஆசிரமத்தை மூடி சீல் வைக்கவும், அபராதம் விதிக்கவும் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில் ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வருபவர்களில் 16 பேரை காணவில்லையென்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆசிரமத்தில் குரங்குகள் வளர்க்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த ஆசிரமத்தில் தங்கி இருப்பவர்களையும் குரங்குகள் கடித்து குதறி வருகிறதாம்.மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குரங்களை வைத்து கடிக்க வைத்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Anbu Ashram, which was operating in Villupuram without permission, has been sealed

குரங்குகள் வைத்து கடிக்க வைத்த கொடூரம்

எனவே குரங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஆசிரமத்தில் உள்ளவர்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல விருப்பப்படுபவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும்  ஆதரவற்றோர்களை வேறு காப்பகங்களுக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படியுங்கள்

கள்ளக்காதலுக்கு இடையூறு.. ஸ்கெட்ச் போட்டு கணவரை போட்டு தள்ளிய மனைவி.. வாண்டடா வந்து சிக்கி பலியான நண்பன்..!
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios