கள்ளக்காதலுக்கு இடையூறு.. ஸ்கெட்ச் போட்டு கணவரை போட்டு தள்ளிய மனைவி.. வாண்டடா வந்து சிக்கி பலியான நண்பன்..!

கவிதாவிற்கும் அங்கு பணிபுரியும் மற்றொரு நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

illegal love affair...Husband killed by poisoning wine

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை மதுவில் விஷம் கலந்து கொடுத்து மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள நடராஜபுரத்தை சேர்ந்தவர் சுகுமார்(45). இவரது மனைவி கவிதா (36). இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். சுகுமார் செங்கல்பட்டில் உள்ள கோழி இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி கவிதா தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கவிதாவிற்கும் அங்கு பணிபுரியும் மற்றொரு நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இதையும் படிங்க;- சென்னையில் மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற ஐடெக் விபச்சாரம்.. அரைகுறை ஆடைகளுடன் 5 இளம்பெண்கள் சிக்கினர்.!

illegal love affair...Husband killed by poisoning wine

இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவி கவிதாவை கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவரை போட்டு தள்ள மனைவி முடிவு செய்தார். இதற்காக சுகுமாரின் அண்ணன் மணி என்பவரிடம் ரூ.400 பணம் கொடுத்து இரண்டு மது பாட்டிலை வாங்கி வர சொல்லியுள்ளார். அதில், ஒரு பாட்டிலை மணியிடம் கொடுத்துவிட்டு, மற்றொரு மது பாட்டிலை மட்டும் இவர் எடுத்துச் சென்றுள்ளார். இவர் எடுத்து சென்ற மதுபாட்டியலில் சிரஞ்சி மூலம் மதுவில் விஷம் கலந்துள்ளார்.

இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை உங்களுக்கு யாரோ மதுபாட்டில் கொடுத்ததாக தன் கணவருக்கு மனைவி கவிதா கொடுத்துள்ளார். ஏற்கனவே ஃபுல் மப்பில் இருந்ததால் மறுநாள் குடித்து கொள்ளலாம் எஎன எடுத்து வைத்துள்ளார். மறுநாள் திங்கட்கிழமை காலையில் அவர் வேலைக்கு செல்லும்போது, இந்த மதுபாட்டிலையும் எடுத்துச் சென்றுள்ளார். மதியம் உணவு நேரத்தின்போது, மதுவை குடிக்க முயற்சிக்கும்போது, அவருடன் பணி செய்யும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த, அவருடைய நண்பர் ஹரிலால் என்பவர் தனக்கும் மதுவில் பங்கு வேண்டும் என கேட்டு வாங்கி குடித்துள்ளார். 

இதையும் படிங்க;-  அம்மா ஆபாச படம் காட்டி என்ன நாசம் பண்ணிட்டாம ஒருத்தன்.. தாயிடம் கதறிய மகள்..!

illegal love affair...Husband killed by poisoning wine

மது அருந்திய சிறிது நேரத்தில் இருவருக்கும் வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளது. இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது, பரிசோதனை செய்யப்பட்டதில் இருவரும் மதுவில் விஷம் கலந்து அருந்தியதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த, மருத்துவர்கள் படாளம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் மனைவியிடம் விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் கணவனை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios