சென்னையில் மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற ஐடெக் விபச்சாரம்.. அரைகுறை ஆடைகளுடன் 5 இளம்பெண்கள் சிக்கினர்.!
சென்னை தேனாம்பேட்டை அண்ணாசாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சென்னையில் அடுக்குமாடி கட்டிடத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.
எப்போது பரபரப்பாக காணப்படும் சென்னை தேனாம்பேட்டை அண்ணாசாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அப்பகுதியில் போலீசார் மப்டியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். பின்னர், மசாஜ் சென்டர் அமைந்துள்ள அடுக்குமாடியில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதையும் படிங்க;- வீட்டில் அழகிகளை வைத்து விபச்சாரம்.. கல்லாகட்டிய அதிமுக பெண் முக்கிய நிர்வாகி கணவருடன் சிக்கினார்..!
அதில், இளம்பெண்களை வைத்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சார தொழில் நடத்தியது தெரியவந்தது. பாலியல் தொழில் நடத்தி வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீசஞ்சீப் ராய் மற்றும் பெங்களூரு மாநிலத்தை சேர்ந்த வினோத்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 அரைகுறை ஆடைகளுடன் 5 வெளிமாநில பெண்கள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் அதே கட்டிடத்தில் பாலியல் தொழிலுக்காக கிளப்பிலேயே தனியாக டெலிகாலர் என்ற பெயரில் இளம் பெண்களை வேலைக்கு அமர்த்தி அவர்கள் மூலம் வாட்ஸ் அப் மற்றும் பல்வேறு மசாஜ் சென்டர்களுக்கு வரும் வாடிக்கையார்களின் எண்களை பெற்று அவர்களிடம், இளம் பெண்கள் இருப்பதாக நட்சத்திர ஓட்டல்களில் அறை புக் செய்து பெரிய அளவில் பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தனியார் கிளப் நிர்வாகிகள் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க;- என்கிட்ட சும்மா சிக்குனு அழகான பொண்ணுங்க இருக்கு வரியா.. உல்லாசத்துக்கு அழைத்த புரோக்கர்.. இளைஞர் செய்த செயல்