அஜித் மகள் அனோஷ்காவா இது? அழகில் அம்மாவையே பீட் பண்ணீட்டாங்க! குடும்பத்தோடு CSK டீ-ஷர்ட்டில் தல ஃபேமிலி!

First Published Mar 23, 2024, 6:10 PM IST

அஜித் தற்போது பைக் டூரில் பிசியாக இருக்கும் நிலையில், அவரது குடும்பம் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்துள்ளனர். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
 

தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக இருக்கும் அஜித், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு, தற்போது  இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. மேலும் அஜித் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன்னுடைய நண்பர்களுடன் பைக் ரெய்டு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். 

அந்த வகையில் கடந்த சில தினங்களாக... இவர் பைக் ரெய்டு செய்து வரும் புகைப்படங்கள், மற்றும்  பிரியாணி செய்த போட்டோஸ், வீடியோஸ் போன்றவை சமூக வலைத்தளத்தில் வைரலானது. 

Famous TV Actors: ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் டாப் 5 சீரியல் பிரபலங்கள் யார் யார் தெரியுமா? Ormax தகவல்!

இது ஒருபுறம் இருக்க அஜித்தின் குடும்பத்தினரோ... நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்  நடந்த சிஎஸ்கே மற்றும் பெங்களூர் அணி இடையிலான ஐபிஎல் போட்டியை கண்டு ரசித்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி  வருகிறது.

மேலும் ஷாலினி தன்னுடைய மகன் ஆத்விக், மகள் அனோஷ்காவுடன் மட்டும் கிரிக்கெட் போட்டியை கண்டு ரசிக்காமல், தன்னுடைய அண்ணன் ரிச்சர்ட் மற்றும் தங்கை ஷாமிலியுடனும் சென்றுள்ளார். குறிப்பாக ஷாலினி தன்னுடைய மகன் மற்றும் மகளுடன்  எடுத்து கொண்ட, புகைப்படத்தை பார்த்து... நெட்டிசன்கள் அஜித் - ஷாலினி மகள் அனோஷ்கா, ஷாலினியை விட உயரமாக வளர்ந்து விட்டதாகவும், இருவரும் பார்க்க அக்கா - தங்கை போல் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

https://tamil.asianetnews.com/gallery/gallery/ormax-released-most-popular-serial-actors-on-tamil-television-mma-sasje5

click me!