Mankatha : ரீ-ரிலீஸிலும் வசூல் போட்டி... கில்லி உடன் மல்லுக்கட்ட வருகிறது மங்காத்தா - எப்போ ரிலீஸ் தெரியுமா?

First Published Apr 18, 2024, 11:25 AM IST

விஜய்யின் கில்லி படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அஜித்தின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான மங்காத்தாவும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

mankatha, Ghilli

கோலிவுட்டில் தற்போது ரீ-ரிலீஸ் டிரெண்ட் என்பது அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் கொண்டாட தவறிய படங்களும் ரீ-ரிலீஸ் ஆகி ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகின்றன. குறிப்பாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 திரைப்படம் ரிலீஸ் ஆன சமயத்தில் படு தோல்வி அடைந்தது. ஆனால் அப்படம் கடந்தாண்டு திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆனபோது புதுப்படங்களுக்கு நிகரான வரவேற்பு அப்படத்திற்கு கிடைத்திருந்தது.

ghilli re release

அதுமட்டுமின்றி விண்ணைத்தாண்டி வருவாயா, 96, யாரடி நீ மோகினி, சிவா மனசுல சக்தி, திருமலை, மயக்கம் என்ன போன்ற கிளாசிக் ஹிட் படங்களும் ரீ-ரிலீஸ் ஆகி ஏகோபித்த வரவேற்பை பெற்றன. அதுமட்டுமின்றி சமீபகாலமாக ரிலீஸ் ஆன தமிழ் படங்கள் அனைத்தும் வரிசையாக தோல்வியை தழுவி வருவதால், ரீ-ரிலீஸ் படங்கள் மூலம் தியேட்டர்கள் கல்லாகட்ட தொடங்கி உள்ளன. இதனால் தற்போது தமிழ்நாட்டில் அதிகளவிலான படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... ஒன்னில்ல ரெண்டில்ல மொத்தம் 13 பைக்... கஷ்டப்பட்ட மாற்றுத்திறனாளிகள்; கடவுள் போல் வந்து உதவிய ராகவா லாரன்ஸ்

Mankatha re release

அந்த வகையில் தற்போது தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. வருகிற ஏப்ரல் 20-ந் தேதி அப்படம் திரைக்கு வர உள்ளது. அதற்கான முன்பதிவும் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸில் வசூல் சாதனை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அப்படம் ரிலீஸ் ஆகும் நாளன்று எந்த புதுப்படமும் ரிலீஸ் ஆகவில்லை என்பதால் அது கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

Vijay, Ajith

விஜய் படத்துக்கு போட்டி என்றாலே அது அஜித் படம் தான். அந்த வகையில் கில்லி படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதற்கு போட்டியாக அஜித்தின் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான மங்காத்தாவும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவித்துள்ளனர். அதன்படி மங்காத்தா திரைப்படம் நடிகர் அஜித்தின் பிறந்தநாளான மே 1-ந் தேதி ரீ-ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர். இதனால் இரண்டு படங்களில் யார் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை அள்ளப்போகிறார்கள் என்கிற போட்டி உருவாகி உள்ளது. அதில் யார் வெல்லப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... பிரச்சாரத்தின்போது திடீர் உடல் நலக்குறைவு.. ICUவில் மன்சூர் அலி கான் - பழச்சாறில் விஷம் கலக்கப்பட்டதா?

click me!