Kamal : குதிரையில் இந்தியன் தாத்தா.. Indian 2 ரிலீஸ் தேதி.. முதல் சிங்கள் அப்டேட் - வெளியிட்ட உலக நாயகன்!

Ansgar R |  
Published : May 19, 2024, 08:28 PM IST
Kamal : குதிரையில் இந்தியன் தாத்தா.. Indian 2 ரிலீஸ் தேதி.. முதல் சிங்கள் அப்டேட் - வெளியிட்ட உலக நாயகன்!

சுருக்கம்

Indian 2 Release Date : இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் மற்றும் முதல் சிங்கள் பாடல் குறித்த தகவலை கமல்ஹாசன் இப்பொது வெளியிட்டுள்ளார்.

கடந்த 1996 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் திரைப்படம் மக்கள் மத்தியிலும், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் ஹிட்டானது. இந்த திரைப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் முற்றிலும் இரு வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருப்பார்.

லஞ்சம் என்கின்ற ஒரு விஷயத்தை ஒழிப்பதற்காக தனது சொந்த மகனையே கொலை செய்துவிட்டு, வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லும் சுதந்திர போராட்ட தியாகியான சேனாபதி என்கின்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்த சங்கர்.

Ajith : மூன்று லுக்கும் ஒரே போஸ்டரில்.. நடுவிரலை காட்டி மிரட்டும் தல - மெர்சலான Good Bad Ugly பட அப்டேட் இதோ!

ஆனால் படபிடிப்பின் போது ஏற்பட்ட ஒரு விபத்தில் பிரபல கார்ட்டூனிஸ்ட் மதன் அவர்களுடைய மருமகன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இந்த திரைப்படத்தில் பணியாற்றி வந்த நடிகர்கள் மனோபாலா மற்றும் விவேக் உள்ளிட்டவர்களும் இறந்தது படத்தின் வேகத்தை குறைத்தது. கொரோனவும் இந்த திரைப்படத்தின் ஓட்டத்தை நிறுத்தியது.

இந்நிலையில் தற்போது பல தடைகளை மீறி சுமார் 7 ஆண்டுகள் கழித்து இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்பொழுது உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி வருகின்ற ஜூலை மாதம் 12ஆம் தேதி இந்தியன் 2 திரைப்படம் உலக அளவில் வெளியாக உள்ளது. 

அதே நேரத்தில் வருகின்ற மே மாதம் 22 ஆம் தேதி அனிருத் இசையில் ஒலிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரபல லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகின்றது. இந்த திரைப்படத்தில் மறைந்த நடிகர்கள் விவேக் மற்றும் மனோபாலா, நடிகர் நடிகைகள் நெடுமுடி வேணு, பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி, ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் மற்றும் முன்னணி நடிகர் எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

"சென்னையில் முளைத்த ஆசை.. கார் தான் என் முதல் காதலி".. தன் பிரம்மாண்ட Car Collection பற்றி பேசிய நாக சைதன்யா!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!