கமல்ஹாசன் இங்க பிறக்கவேண்டிய ஆளே கிடையாது... டிஸ்கோ சாந்தி என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா?

First Published Aug 6, 2022, 6:58 PM IST

நடிகர் கமல்ஹாசன் குறித்து, மூத்த கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தி பிரபல ஊடகம் ஒன்றில் கூறியுள்ள தகவல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
 

80 களில் பல முன்னணி நடிகர்கள் படங்களில் கவர்ச்சி நடனம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் டிஸ்கோ சாந்தி. இவர் பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை திருமணம் கொண்ட பின்பு திரையுலகை விட்டு முழுவதுமாக ஒதுங்கினார். ஸ்ரீஹரி தெலுங்கு, தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

கணவர் இறந்து கிட்ட தட்ட 9 ஆண்டுகள் ஆகும் நிலையில்... மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவ்வப்போது சில ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் இவர், நடிகர் கமல்ஹாசன் குறித்தும், அவர் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ள விக்ரம் படம் குறித்தும் பேட்டி ஒன்றில் மெர்சலாகி பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்: என்ன தான் பிரச்சனை ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு? தனுஷை விவாகரத்து செய்தபின் கோவில் கோவிலாக சுத்துறாங்களே!
 

இந்த பேட்டியில், உலக நாயகன் கமல்ஹாசன் இங்கு பிறக்க வேண்டிய ஆளே கிடையாது. தெரியாத்தனமாக கடவுள் அவரை இங்கு படைத்து விட்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 4 நான்கு மணி வரை அவரது படத்தை தன்னுடைய மகனுடன் பிங்கர் சிப்ஸ் சாப்பிட்டு கொண்டு, விசில் அடித்து பார்த்ததாக பூரித்து கூறியுள்ளார். மேலும் தன்னுடைய மகன் தீவிர கமல் ரசிகன் என்பதால், அவருடைய நண்பர் ஒருவருடன் சேர்ந்து, திரையரங்கில் ஒரு நாள் முழுக்க போடப்பட்ட 10 ஷோக்களையும் பார்த்ததாக தெரிவித்துள்ளார். அதே போல் இந்த வயதிலும் அவர் இப்படி நடிப்பது பிரமிக்க வைத்துள்ளதாக மெர்சலாகி பேசியுள்ளார்.

கமல் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் சுமார் 140 கோடி பட்ஜெட்டில் படமாக எடுக்கப்பட்டு 440 கோடிக்கு மேல், இந்த படத்தை தயாரித்து நடித்த கமல்ஹாசனுக்கு லாபத்தை பெற்று தந்துள்ளது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் நான்கு படங்களை அடுத்தடுத்து தயாரிக்கவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் செய்திகள்: கடல் நீரில் சொட்ட சொட்ட நனைந்து... கவர்ச்சியில் விளையாடிய சுனைனா! ஹார்ட் டச்சிங் ஹாட் போட்டோஸ்!
 

click me!