
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்கின்ற திரைப்படத்தை விறுவிறுப்பாக தற்பொழுது இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இந்த திரைப்படம் தளபதி விஜயின் 68வது திரைப்படமாக உள்ளது. மேலும் தனது 69வது பட பணிகளை முடித்த பிறகு தன் சினிமா பயணத்திற்கு குட் பை சொல்லி விட்டு, தனது தமிழக வெற்றிக் கழக கட்சியின் பணிகளை அவர் மேற்கொள்ளவிருக்கிறார்.
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அவர் அரசியலில் களமிறங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் அவருடைய 68வது மற்றும் 69வது திரைப்படங்கள் அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதற்கிடையில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து கூலி என்கின்ற திரைப்படத்தை இயக்க உள்ளார்.
GQ விருது விழாவில் ரிவெஞ்ச் பிளாக் ஆடையில் வந்து ஷாக் கொடுத்த நயன்தாரா!
விரைவில் அப்பாட பணிகள் துவங்க உள்ளது, அண்மையில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கிளாசிக் திரைப்படங்களின் சில வசனங்களும் அதில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல நடிகரும், ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கார்த்திக் குமார் ஒரு சர்ச்சையான வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அதில் இப்பொழுது வரும் படங்களின் ட்ரெய்லர்கள் எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கிறது. மேலும் அந்த நடிகர்கள் ஏற்கனவே நடித்த பழைய படங்களில் இருந்து வசனங்கள் வைக்கப்படுகின்றது. நீங்கள் என்ன நினைத்துக் கொண்டாலும் பரவாயில்லை, இப்பொழுது வரும் டிரைவர் எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கிறது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த சர்ச்சையான வீடியோவை வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து இணையவாசிகள் பலர் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு அவர் பதில் அளித்து இருக்கிறார்.
அதில் "நோ.. நோ.. நோ.. இது கமர்சியல் திரைப்படங்களை எடுக்கும் எங்களை போன்றவர்கள் பற்றியது தான். கார்த்தி கூறுவதும் ஒரு வகையில் உண்மைதான். நாங்கள் எங்களுடைய இந்த கமர்சியல் பாணியில் இருந்து வெளியேறி வேறு விதமாக படங்களை எடுத்தால் அதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்று அவர் கூறியுள்ளார்.
அதாவது, தான் லோகேஷ் அல்லது ரஜினியை குறிப்பிட்டு அதை பகிரவில்லை, கமெர்சியல் படங்கள் எடுக்கும் எங்களை பற்றியது அது என்று கூறியுள்ளார்.
9 படம் தோல்வி.. பாலிவுட் நெப்போட்டிசம்.. தற்போது பல கோடி சொத்துக்களுக்கு அதிபதி இந்த நடிகை..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.