GQ விருது விழாவில் ரிவெஞ்ச் பிளாக் ஆடையில் வந்து ஷாக் கொடுத்த நயன்தாரா!

Published : Apr 28, 2024, 08:11 PM ISTUpdated : Apr 28, 2024, 11:03 PM IST
GQ விருது விழாவில் ரிவெஞ்ச் பிளாக் ஆடையில் வந்து ஷாக் கொடுத்த நயன்தாரா!

சுருக்கம்

நயன்தாரா அணிந்திருக்கும் உடை ரிவெஞ்ச் பிளாக் ட்ரெஸ் என்று அழைக்கப்படுகிறது. இதை ஏன் நயன்தாரா அணிந்தார் என்பது இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது.

நயன்தாரா தனது அற்புதமான நடிப்பு, அதிரடியான படத் தேர்வுகள் மூலம் தொடர்ச்சியாக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். 2023ஆம் ஆண்டில், இயக்குனர் அட்லீயின் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து பாலிவுட் சினிமாவில் நுழைந்தார் நயன்தாரா. இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த படமாக உள்ள ஜவான் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1,148.32 ஐ குவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து பல பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தபோது நயன்தாரா அவற்றைத் தவிர்த்து வருகிறார். ஆனால், தமிழில் கைவசம் உள்ள படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு விருது நிகழ்ச்சியில் பங்கேற்றார். ரிவெஞ்ச் பிளாக் ட்ரெஸ் எனப்படும் கருப்பு நிற ஆடையில் தோன்றிய அவரது லுக் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியுள்ளது.

வெள்ளிக்கிழமை நயன்தாரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், GQ விருது நிகழ்ச்சியில் கருப்பு நிற உடையில் எடுத்த படங்களை பகிர்ந்துள்ளார். அவர் அணிந்திருக்கும் உடை ரிவெஞ்ச் பிளாக் ட்ரெஸ் என்று அழைக்கப்படுகிறது. இதை ஏன் நயன்தாரா அணிந்தார் என்பது இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது.

இந்த பொண்ணு ஞாபகம் இருக்கா? க்யூட்டான பிங்க் தாவணியில் நடிகை ஆராவின் லேட்டஸ்ட் போட்டோஸ்

ரிவெஞ்ச் பிளாக் ஆடை:

இந்த ரிவெஞ்ச் பிளாக் ஆடைக்கு பிரிட்டன் இளவரசி டயானா மூலம்தான் பிரபலமானது. பிரிட்டன் இளவரசர் சார்லஸும் அவரது மனைவியும் இளவரசியுமான டயானாவும் கருத்து வேற்றுமை காரணமாக திடீரென விவாகரத்து பெற்றது உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

விவாகரத்து செய்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இளவரசர் சார்லஸ் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு திருமணத்திற்குப் பின் இன்னொரு பெண்ணுடன் உறவு இருந்தது என்று ஒப்புக்கொண்டார். இப்போது அவரது மனைவியான கமீலாதான் அந்தப் பெண் என்றும் தெரியவந்தது.

இந்தப் பேட்டி வெளியான மறுநாளே இளவரசி டயானா ஒரு விழாவில் மிகவும் கவர்ச்சியான உடையில் தோன்றி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அணியும் வழக்கமான ஆடைகளைப் புறக்கணித்துவிட்டு, படு கவர்ச்சியான கருப்பு நிற ஆடையில் அந்த விழாவில் பங்கேற்றார்.

தோள்பட்டை முழுவதும் தெரிய, டீப் நெக் கவுன் அணிந்திருந்தார் டயானா. டயானாவின் செயல் அரச குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இளவரசர் சார்லஸ் இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டதற்காக அவரை பழி வாங்குவதற்காகவே டயானா அப்படி கவர்ச்சியான ஆடையை அணிந்தார் என்று பிரிட்டன் பத்திரிகைகள் எழுதின. இளவரசி டயானா அணிந்த அந்த கவர்ச்சியான உடைக்கு Revenge Black Dress (ரிவெஞ்ச் பிளாக் ட்ரெஸ்) என்ற பெயரும் வந்துவிட்டது.

இளவரசி டயானா அணிந்ததைப் போல அதே கருப்பு நிற உடையை நயன்தாரா அணிந்திருப்பது அவரது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

எல்லா மொபைல் போனிலும் இந்தச் சின்ன துளை இருப்பது ஏன் தெரியுமா?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?