Samantha : திரையுலகில் புது அவதாரம் எடுக்கும் சமந்தா.. பிறந்தநாளில் வெளியான மிரட்டல் அப்டேட் - BANGARAM பராக்!

Ansgar R |  
Published : Apr 28, 2024, 06:18 PM IST
Samantha : திரையுலகில் புது அவதாரம் எடுக்கும் சமந்தா.. பிறந்தநாளில் வெளியான மிரட்டல் அப்டேட் - BANGARAM பராக்!

சுருக்கம்

Samantha Ruth Prabhu : இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடும் பிரபல நடிகை சமந்தா, தனது புதிய படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு புதிய அவதாரத்தில் அவர் இந்த படத்தில் தோன்றவுள்ளார்.

சென்னை பல்லாவரத்தில் கடந்த 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி பிறந்த நடிகை தான் சமந்தா ருத் பிரபு. சிறு வயது முதல் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக மாடலிங் துறையில் பயணித்த சமந்தா, கடந்த 2010 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான சிம்புவின் "விண்ணைத்தாண்டி வருவாயா" என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். 

அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தது அவருடைய முன்னாள் கணவர் நாக சைதன்யா தான் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதன் பிறகு தமிழில் "பானா காத்தாடி", "மாஸ்கோவின் காவேரி", "நடுநிசை நாய்கள்" மற்றும் "நீதானே என் பொன்வசந்தம்" உள்ளிட்ட பல நல்ல திரைப்படங்களில் நடிக்க துவங்கினார் சமந்தா. 

Janhvi Kapoor : "ஏணி ஒன்னு தேவைப்படும் போல".. தங்கை வெளியிட்ட போட்டோஷூட் - பங்கமாக கலாய்த்த ஜான்வி கபூர்!

பாலிவுட் திரைப்படத்திலும் நடித்திருக்கும் நடிகை சமந்தா, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் தான் அதிக அளவிலான திரைப்படங்களை நடித்திருக்கிறார். இறுதியாக தமிழில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான "காத்து வாக்குல இரண்டு காதல்" என்கின்ற திரைப்படத்தில் நடித்தார். 

அதன் பிறகு அவர் தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் என்றாலும் அவருடைய உடல்நிலை கருதி பெரிய அளவில் அவர் திரைப்படங்களில் நடிக்காமலே இருந்து வருகிறார். பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ள நடிகை சமந்தா, இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், தன் புது திரைப்படம் குறித்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

"Maa Inti - Bangaram" என்ற அந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகி உள்ளது. கையில் துப்பாக்கியுடன் சமந்தா இருக்கும் அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தை "Tralala Moving Pictures" என்ற நிறுவனம் தான் தயாரித்து வழங்கவுள்ளது. இந்த நிறுவனம் வேறு யாருடையதும் அல்ல, நடிகை சமந்தா உருவாக்கியுள்ள ஒரு புதிய தயாரிப்பு நிறுவனம் தான் இது. ஆகவே இந்த திரைப்படத்தின் மூலம் நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் கலை உலகில் சமந்தா களமிறங்கியுள்ளார்.

Malavika Mohanan : கல்லூரி விழாவில் கருப்பு சேலையில்.. மனதை கொள்ளைகொண்ட மாளவிகா மோகனன் - வைரல் போட்டோஸ்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்
பாக்ஸ் ஆபிஸ் ‘பாட்ஷா’ ரஜினிகாந்த் நடித்து அதிக வசூல் அள்ளிய டாப் 7 மூவீஸ் ஒரு பார்வை