பழிதீர்க்குமா டெல்லி? வாங்கிய அடியை திருப்பி கொடுக்க பேட்டிங் செய்ய திட்டமிட்ட ரிஷப் பண்ட்!

First Published | Apr 29, 2024, 7:40 PM IST

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 47ஆவது லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

Kolkata Knight Riders vs Delhi Capitals, 47th Match

ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெறும் ஐபிஎல் 2024 தொடரின் 47ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். டெல்லி அணியில் சிறப்பாக பந்து வீசி வரும் வேகப்பந்து வீச்சாளர் ரஷீக் தர் சலாம் இடம் பெற்றுள்ளார்.

Kolkata Knight Riders vs Delhi Capitals, 47th Match

இதே போன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மிட்செல் ஸ்டார் மற்றும் வைபவ் அரோரா இருவரும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

Tap to resize

Kolkata Knight Riders vs Delhi Capitals, 47th Match

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல், ரிங்கு சிங், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.

Kolkata Knight Riders vs Delhi Capitals, 47th Match

டெல்லி கேபிடல்ஸ்:

பிரித்வி ஷா, ஜாக் பிரேசர் மெக்கர்க், அபிஷேக் போரெல், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், ரசீக் தர் சலாம், லிசாட் வில்லியம்ஸ், கலீல் அகமது.

Kolkata Knight Riders vs Delhi Capitals, 47th Match

இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 33 போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் 15 போட்டிகளிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 17 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. இதுவே ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 9 போட்டிகளில் கேகேஆர் 7 போட்டியிலும், டெல்லி கேபிடல்ஸ் 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

Kolkata Knight Riders vs Delhi Capitals, 47th Match

ஒட்டுமொத்தமாக ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 86 போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 50 போட்டிகளில் வெற்றியும், 36 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய 16ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் 272/7 ரன்கள் குவித்தது.

Kolkata Knight Riders vs Delhi Capitals, 47th Match

பின்னர் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் 166 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த போட்டியில் தோல்வி அடைந்ததற்கு பழி தீர்ப்பதற்கா நேரமாக ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 47ஆவது லீக் போட்டி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!