Yuvraj Singh
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரானது வரும் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
Yuvraj Singh
இந்த தொடரில் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, ஓமன், கனடா, பப்புவா நியூ கினியா, தென் ஆப்பிரிக்கா, உகாண்டா, நியூசிலாந்து, நமீபியா, வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா, ஸ்காட்லாந்து, நேபாள், நெதர்லாந்து ஆகிய 20 அணிகள் இடம் பெற்றன.
ICC Mens T20 World Cup 2024
இந்த தொடருக்கான இந்திய அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. ஆனால், அதற்கு முன்னதாக டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெறும் 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நியூசிலாந்து அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ICC Mens T20 World Cup 2024
இவரது தலைமையிலான நியூசிலாந்து அணியானது 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை சென்றது. இதே போன்று 2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டி வரை சென்றது.
ICC Mens T20 World Cup 2024
இந்த நிலையில் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெறும் 20 அணிகளிலிருந்து அரையிறுதிப் போட்டிக்கு செல்லும் டாப் 4 அணிகளின் பட்டியலை இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார். அதில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளை பட்டியலிட்டுள்ளார்.
ICC Mens T20 World Cup 2024
கடந்த 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், பாகிஸ்தான் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ICC Mens T20 World Cup 2024
இதே போன்று 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில், இங்கிலாந்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றது. அதில், பாகிஸ்தானை வீழ்த்தி 2ஆவது முறையாக டிராபியை வென்றது.
ICC Mens T20 World Cup 2024
இந்த நிலையில் தான், கடந்த சீசனில் இடம் பெற்ற இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகளுடன் ஆஸ்திரேலியாவும் இந்த முறை அரையிறுதிப் போட்டிக்கு செல்லும் என்று யுவராஜ் சிங் பட்டியலிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.