மேட்சை சீக்கிரம் முடிங்க, குழந்தை பிறக்க போகிறது – வைரலான சாக்‌ஷியின் இன்ஸ்டாகிராம் பதிவு!

Published : Apr 29, 2024, 02:26 PM IST

சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது சாக்‌ஷி தோனி பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

PREV
14
மேட்சை சீக்கிரம் முடிங்க, குழந்தை பிறக்க போகிறது – வைரலான சாக்‌ஷியின் இன்ஸ்டாகிராம் பதிவு!
Chennai Super Kings vs Sunrisers Hyderabad, 46th Match

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 46ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

24
Chennai Super Kings vs Sunrisers Hyderabad, 46th Match

பின்னர் கடின இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஓரளவு தாக்குப்பிடித்தாலும் பெரிதாக சோபிக்கவில்லை. பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க சிஎஸ்கே 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

34
CSK vs SRH, 46th IPL Match

இந்த நிலையில், இந்தப் போட்டியின் போது சாக்‌ஷி பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தப் போட்டியை நேரில் கண்டு ரசித்த சாக்‌ஷி தோனி, சீக்கிரம் போட்டியை முடித்து விடுங்கள். குழந்தை பிறக்க போகிறது. வலி ஆரம்பமாகிவிட்டது. அத்தையாகும் எனது கோரிக்கை என்று பதிவிட்டுள்ளார்.

44
Chennai Super Kings vs Sunrisers Hyderabad, 46th Match

இதற்கு முக்கிய காரணம், சாக்‌ஷியின் சகோதரர் மனைவி பிரசவ வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதன் காரணாக போட்டியை முடித்துவிட்டு செல்ல வேண்டும் என்பதற்காக சாக்‌ஷி இவ்வாறு பதிவிட்டுள்ளார்.  எனினும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய சன்ரைசர்ஸ் 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்து 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திலிருந்து 4ஆவது இடத்திற்கு சரிந்தது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories